உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

43. வெள்ளையம்மாளுக்கு சர்தார் பெற்றுத்தந்த உரிமை *

ஈரோடு மாவட்டம், காங்கயம் வட்டம் காடையூரில் கொங்கு வேளாளரில் சேடகுலப் பெரியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு வெள்ளை நிறமாக ஒரு பெண் பிறந்ததால் எவரும் திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை. அவளை மணம் செய்து கொள்பவர்களுக்குத் தன் உரிமையில் கால்பங்கு தருவதாக அறிவித்தார் (கால் காணி). அப்பெண்ணின் பெயர்

வெள்ளையம்மாள்.

நாமக்கல் வட்டம், திருச்செங்கோடு வட்டம் கருமாபுரத் திலிருந்து கால்நடைப் பட்டியை ஓட்டிவந்த காங்கேயன் (பொருள்தந்தகுல வேளாளர்) அதற்கு உடன்பட்டுத் திருமணம் செய்துகொண்டு மாமனார் வீட்டிலேயே தங்கிவிட்டான்.

சேடகுலப் பெரியவர் இறந்துவிடவே அவர் மக்கள் நால்வரும் கால்காணி தர மறுக்கின்றனர். காங்கேயனைக் கொன்றுவிட்டுத் தங்கையைக் கணவர் ஊருக்குத் துரத்துகின்றனர்.

காங்கயத்தில் அப்பெண்ணையும் அவள் குழந்தைகளையும் சந்தித்த குதிரைவீரர்கள் தலைவராகிய ஒரு இசுலாமிய சர்தார் உதவியால் அவளுக்குக் கால்காணி மட்டுமல்லாது முழுக்காணி உரிமைகளையும் கொடுத்துவிட்டுச் சேடகுலச் சகோதரர்கள் ஊரைவிட்டே போய்விடுகின்றனர்.

குலகுருவின் ஆலோசனைப்படி வெள்ளையம்மாள் இனி தன் வழியினர் இஸ்லாமிய சர்தாருக்கு நன்றிக் கடனாக ஆண்மக்கள் காது குத்தாமலிருந்து பின் திருமணம் செய்ய வேண்டும் என்று விரும்பினாள். இன்றும் அவ்வாறே அவர் வழியினர் செய்து வருகின்றனர். காது குத்தாமல் இருப்பதால் அவர்கள் ‘முழுக்காது குலத்தினர்' என்று அழைக்கப்படுகிறார்கள். கொங்கு வேளாளரில் பொருளந்தை குலத்தினர் காடையூர்க் காணியாளர்களை மட்டும் முழுக்காது குலம் என்று அழைக்கப்படுகிறார்கள்.

சர்தார் செய்த உதவியால் வெள்ளையம்மாள் பெற்ற காணி விபரத்தைக் "கண்ணாடிப் பெருமாள்” என்பவர் ஒரு காவியமாகவும பாடியுள்ளார். காடையூர் சிவன் கோயிலில் இந்நிகழ்ச்சி ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.

  • காடையூர் முழுக்காது குல வரலாறு: செ.இராசு