உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு

369

43-A. ஹைதர் அலி மதித்துப் போற்றிய கிறித்தவப் பாதிரியார்*

ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனியின் நாடு பிடிக்கம் ஆசையால் கம்பெனி வெள்ளையர்கள் மீதும், பிற வெள்ளையர் மீதும் ஹைதர் அலி கொண்ட கோபம் யாவரும் அறிவர்.

ஆனால் கிறித்தவப் பாதிரிமார்களிடம் அன்பும் இரக்கமும் கொண்டிருந்தார். மைசூர் சீரங்கப்பட்டணத்தில் அவர் மாளிகை அருகிலேயே மேனாட்டுப் பாதிரியார் ஒருவர் வாழ்ந்து வந்தார்.

பிரஷியா நாட்டில் சோனேபர்க் என்ற ஊரில் 1726-ல் பிறந்தவர் கிறிஸ்டியன் ஃபிரரெடரிக் ஸ்வார்ட்ஸ். 1749ல் டேனிஷ் மிஷனரிக் குழுவில் இடம்பெற்று கிழக்கிந்தியர் கம்பெனிக் கப்பலில் பயணம் செய்து 17.7.1750ல் கடலூர் வந்தார். 10 ஆண்டுகள் தரங்கம்பாடியில் இருந்தார். 1754-ல் கடலூர், 1758 நாகை, 1760 இலங்கை, 1766-1776 திருச்சியில் பணியாற்றிப் பின் தஞ்சையில் வாழ்ந்து 13.2.1798ல் மறைந்தார்.

கிழக்கிந்தியக் கம்பெனியில் செல்வாக்கு பெற்றிருந்த அவர் ஹைதர் அலிக்கும் - கம்பெனிக்கும் சமரசம் செய்து வைக்க விரும்பி ஹைதர் அலியையும்

இருமுறை சந்தித்துள்ளார். ஹைதர் அலி ஸ்வார்ட்ஸ் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார்.

தன் நாட்டிலுள்ள எல்லா அதிகாரிகளும் ஸ்வார்ட்ஸ் பாதிரியாருக்கு எந்தத் தொல்லை யும் கொடுக்கக்கூடாது என்றும், அவர் மிகப் புனிதமான மனிதர் என்றும், அவருக்குப் பாது காப்புக் கொடுக்க வேண்டும் என்றும் ஹைதர் அலி ஆணை பிறப்பித்திருந்தார். கிழக்கிந்திய

கம்பெனி

ஸ்வார்ட்ஸ்

இயக்குநர்கள்

பாதிரியாருக்கு

  • தஞ்சை மராட்டியர் கல்வெட்டுக்கள்; செ.இராசு: தமிழ்ப் பல்கலைக்கழக

வெளியீடு பக்கம் 85, 86, 87