உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு * 97

50. இஸ்லாமியர் தறிக்கு வரி நீக்கிய சேதுபதி *

சேது நாட்டில் தறி நெசவு மிகுதி. பல சமூக மக்களோடு இஸ்லாமியர்களும் தறிநெசவில் பெருவாரியாக ஈடுபட்டனர். இன்றும் இஸ்லாமியர்கள் மிகுதியாக வாழும் கமுதி, அபிராமம், எக்ககுடி, பரமக்குடி, இளையாங்குடி, சித்தார்கோட்டை, பனைக்குளம் ஆகிய பல ஊர்களில் ‘பாவோடித் தெரு' என்ற பெயரில் தெருக்கள் உள்ளன. கீழக்கரையில் பருத்திக்காரத் தெரு’ என்ற தெரு உள்ளது. திருமலை ரகுநாத சேதுபதி வழங்கிய செப்பேடு ஒன்றில் “நமது காவல் குடியினரான துலுக்கர் தறிக்கடமை இல்லை” என்று கூறப்பட்டுள்ளது. கல்வெட்டுக்களில் ‘தறியிறை’என்றும் கூறப்படும். ‘நமது காவல் குடி' என்ற தொடரால் நேயம் மிகுந்த நெருக்கமான தொடர்பு புலப்படுகிறது.

7

  • சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம். கமால். பக்கம் 59.