உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

51. சேதுபதியும் சீதக்காதியும்

கிழவன் சேதுபதி (1678-1710) காலத்தில் வள்ளல் சீதக்காதி சேதுபதியின் அமைச்சராக விளங்கினார். சேதுபதி சீதக்காதி அவர்களைத் தன் சொந்த தம்பியாக உயர் மதிப்புடன் நடத்தினார். சீதக்காதி அவர்கட்கு “விசயரகுநாதப் பெரியதம்பி” என்று பட்டமளித்துப் பாராட்டினார். பின்னர் சீதக்காதி வழி வந்தவர்களும் சிலர் 'பெரியதம்பி' என்ற சிறப்புப் பெயரைச் சேர்த்துக் கொண்டனர்.

கிழவன் சேதுபதி சேதுநாட்டின் தலைநகரைப் போகலூரி லிருந்து பெரியகோட்டையும் அரண்மனையும் கட்டி இராமநாத புரத்திற்கு மாற்றினார். செவ்வக வடிவில் 27 அடி உயரமும் 5 அடி அகலமும் 44 கொத்தளங்களுடன் அமைத்தார். இதன் நிர்மாணப் பணியில் பெரிதும் உதவியவர் சீதக்காதியாவார். (Manual of Ramnad Samasthanam By T. Rajaram Rao, 1891, Page 280) “கீழக்கரை சீதக்காதி மரைக்காயர்” என்று அந்நூல் குறிக்கிறது.

இலங்கையிலிருந்து ஏலம், கிராம்பு, சாதிபத்திரி, கொட்டைப் பாக்கு ஆகிய பொருட்கள் கிழக்குக் கடற்கரைக்கு வந்தன. அங்கிருந்து தானியம், பட்டுப்புடவை, பட்டுநூல், கருப்பட்டி, புளி, தேங்காய், சங்கு ஆகியவை ஏற்றுமதியாயின. இவ்வணிகத்தில் சீதக்காதிக்கு ஏகபோக உரிமை இருந்தது.

கடற்கரை வாழ் இஸ்லாமியர்களும் வள்ளல் சீதக்காதியும் சேதுநாட்டின் வணிக - செல்வ வளர்ச்சியில் பெரிதும் உதவினர். பௌத்திர மாணிக்க பட்டணம் என்று சிறப்பிக்கப்பட்ட காயல் பட்டினத்திற்கும் இதில் பெரும் பங்கு உண்டு. அவர்களது மரக்கலங்கள் வங்கக் கடலையும், அரபிக் கடலையும் வலம் வந்து பலதரப்பட்ட பொருட்களைக் கீழக்கரை, பாம்பன், தேவிபட்டினம், தொண்டி ஆகிய துறைமுகங்களுக்குக் கொண்டு வந்தன. ஏற்றுமதிப் பொருட்களை எடுத்துச் சென்றன. அவர்கள் மரக்கலங்களுக்கு அரசர்கள் எனப்பட்டனர் (மரக்கலராயர் மரக்காயர்) இவர்களைக் “கப்பலோட்டிய தமிழர்கள்” எனலாம்.

-