பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் கா.கோவிந்தனார்

127

நல்லரசு நடைபெற அவர்கள் கூறும் அறிவுரைகளைக்: கேட்டு அவ்வழி அரசு நடாத்தினான்.

அமைச்சு:

தன் ஆட்சி நல்லாட்சியாக நிலவுவதற்கு வேண்டும் அறிவுரைகளை வழங்க வல்ல அமைச்சர்களை அலன் பெற்றிருந்தான்.சுற்றம் என்ற பெயரால் அவர்கள் அழைக்கப் பெற்றனர். பால் புளிப்பினும, பகல் இருளினும், நால் வேதநெறி திரியினும், அறநிலையில் திரியாதவர் என்ற பாராட்டினைப் பெற்ற அச்சுற்றம் சூழ அரசன் விளங்குவது,கடல் நடுவே தோன்றும் ஞாயிறுக்கும், விண்மீன்களுக்கு இடையே தோன்றும் வெண்திங்களுக்கும் ஒப்பாகும் எனக் கூறிப் பாராட்டுவர்.

ஐம்பெருங் குழு

அரசனுக்கு அறிவுரைகள் கூற, அமைச்சர்களே யல்லாமல், நாற்பெருங்குழு, ஐம்பெருங்குழு, எண்பேராயம் என்பன போலும் அரசியல் அமைப்புக்களும் இருந்தன.

அறங்கூறவையம்

வேந்தற்கு வெற்றி தருவது வேற்படை முதலாம் நாற்படை அன்று; அது தருவது, அவன் கை வளையாச் செங்கோல் என்பதை அறிந்திருந்தான்.அரசன்; வலியுரான் நலிவு எய்தி முறை வேண்டி வந்தார்க்கும்,வறுமையான் வருந்தித் தம் குறைகூறி, நின்றார்க்கும் காட்சிக்கு எளியனாகி நடுவு நிலை பிறழாது நீதி வழங்கிவந்தான்.

அறத்தின் காவலன் அரசனே எனினும், நாட்டில் ஏற்படும். அத்தனை வழக்குகளையும் அவனே கேட்டு நீதி வழங்குவது இயலாது ஆதலின், பேரூர்கள் தோறும் அறங்கூறவையம் இடம்பெற்றிருந்தன. அச்சம், அவலம், ஆர்வம், செற்றம், உவகை ஆகிய உள்ளுணர்வுகளுக்கு அடிமையாகாமல், துலாக்கோல் போல் பிறழாது நின்று