பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

தமிழக வரலாறு-கரிகாற் பெருவளத்தான்

நீதி வழங்கும் நல்லோர்களை, அமர்த்தி நாட்டில் நீதி நிலவக் கண்டான்.

குடிபுரவு

நிலவரியும், சுங்கவரியும், அரச பண்டாரத்தின் வருவாயேயாகும். மக்களைப்புரத்தல் காரணமாக வாங்குவதால்,வரி,குடிபுரவு என அழைக்கப்பட்டது.குடிபுரவு ஒரு வரு வாய் எனினும்,அரசன் அது ஒன்றையே எதிர்நோக்கி இருத்தல்,அவன் ஆண்மைக்கு.அழகன்று என்ற உணர்வுடையவன் அக்கால அரசன்: வரியை முறையறிந்து வாங்கின்,அது கோடி கோடியாகக் குவியும்.அது விடுத்துக் குடிகளை வருத்திக் கொள்ள முனையின், குடிகளும் கெட்டு அழிவர்,அரசன் வருவாயும் தடையுறும் என்பதையும் அறிந்திருந் தான். வரி தண்டுவது முறையே எனினும்,சில காரணம் கருதி நிலங்களுக்கு வரி நீக்கம் அளிப்பதும் அன்று இருந்தது. வாணிகம் கருதி துறைமுகங்களில் வந்து குவியும் உள்நாட்டு,வெளிநாட்டுப் பொருள்கள் மீது சுங்கவரியும் வசூலிக்கப்பட்டது. சுங்கவரி உல்கு என அழைக்கப்பட்டது.

ஊர்க்காவல்

படை அச்சம் நீங்க, எல்லைகளை நாற்படையால் காக்கும் அரசன், கள்வராலும், ஆறலைக்கள் வராலும்,பேரூர், சிற்நூர்களிலும்,பெருவழிகளிலும்,களவாடலும், கொள்ளை அடித்தலும் நிகழாவாறு, பேரூர், சிற்றுார்களிலும்,பெருவழிகளிலும், இரவு பகல் இரு பொழுதும் கண்ணயராது கடனாற்றும் காவலரை நியமித்திருந்தான்.

நல்லாட்சி

இவ்வாறு,அக்கால ஆட்சிமுறை,முடியாட்சியே. எனினும், குடிநலமே தன் முடி நலம் என்ற உயர்உள்ளம் உடையனாகி, குடிகளின் அச்சம் அகற்றி, அவர்கள் பசி அறியாப் பெருவாழ்வு வாழ உதவும் நல்லாட்சி மேற்கொண்டிருந்தான்; சங்ககாலத் தமிழ் அரசன்.