பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் கா. கோவிந்தனார்

131

நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளிக்கும் இடையே நிகழ்ந்த போரும் அரசுரிமைக்கான போராம். தந்தை இறந்த பின்னர்,ஆளலாம் என அடங்கியிராது, அவர் உயிரோடிருக்கும் போதே, தான் ஆட்சி உரிமை அடைய வேண்டும் என்ற பேராசையில் தந்தை மீதே போர் தொடுத்து எழுந்த நிகழ்ச்சியும் உண்டு.வேற்றரசன் மகள் மீது வேட்கை கொண்டு,அவளை மணம் செய்து தா என்ற தன் வேண்டுகோளை, மகளைப் பெற்ற மன்னவன் மறுத்தபோது: அவளைப் பெறுவான் வேண்டி அவள் தந்தை மீது போர் தெர்டுத்துப்போவதும் ஒரு போர்க் காரணமாகும்.

ஆனிரை கவர்தல்

சேர,சோழ,பாண்டியர்களாகிய மூவேந்தர்,தமக்குரிய அடையாள மாலை களாகிய, பனை, ஆத்தி, வேம்பு களால் ஆன மாலையுடன், தாம் மேற்கொண்டு செல்லும் போரின் காரணம் குறிக்கும் வெட்சி முதலாம் மாலைகளையும் அணிந்து செல்வர். தாம் போர் தொடுத்திருப்பதைப் பகையரசர்க்கு உணர்த்தும் முன் அறிவிப்பாக, அப்பகை வரின் ஆனிரைகளைக் கவர்ந்து வருவர். போருக்குப் போகு முன் நிமித்தம் (சகுனம்) பார்ப்பதும், நல்ல நாளில், அரசரும், படைத்தலைவரும் புறப்பட இயலாதாயின், வாள், குடை முதலாயினவற்றை முன்னர்ப் போக விடுவதும் வழக்கமாம்: பகைவர் படை ஆற்றலினும், தன் படை ஆற்றல் பெரிதாதல் வேண்டும் எனும் நினைவால், தனக்குத் துணையாகக்,குறுநிலத் தலைவர்களைப் பெறுவதும்.உண்டு.

முற்றுகை

பகைவர் படையினும், தன் படை பெரிது என்ற நிலை ஏற்பட்ட போதும், பகைவரை எளிதில் வெற்றிக் கொள்வதற்கு ஏற்புடைய காலம் வரும்வரை காத்திருந்து, வெற்றி