பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

தமிழக வரலாறு-கரிகாற் பெருவளத்தான்

பெறுவதற்கு ஏற்புடைய இடமாகத் தேர்ந்து சென்று பகைவரைத் தாக்குவர். போர் தொடுத்துச் செல்லும் படை பகை நாட்டுள் புகுந்ததும், ஆங்குள்ள ஊர்களைத் தீயிட்டு அழிப்பதும், வயல்களில் விளைந்துள்ள உணவுப் பயிர்களை அழிப்பதும், காவற் காடுகளை வெட்டி வீழ்த்துவதும், உண்ணுநீர் நிலைகளைப் படை கொண்டு கலக்கிச் சேறாக்குவதும் ஆகிய அழி செயல்களைச் செய்யும்.அது அறிந்து அந்நாட்டுப் படை எதிர்த்து வந்து தாக்கிய வழி கடும் போர் நிகழும்.

அப்போரில் படையெடுத்து வந்தவன் தோற்பின், அவனை, அந்நாட்டுப் படைத் தன் நாட்டு எல்லைக்கப்பால் துரத்தி அடிப்பதும், சில சமயம், அவன் நாட்டுத் தலைநகர் வரையும் துரத்திச் சென்று அடியோடு அழித்துத் திரும்புவதும் உண்டு. மாறாக. படை எடுத்து வந்தவன், தன்னைத் தடுத்து நிறுத்த வந்த அந்நாட்டுப் படையை அந்நாட்டு எல்லையில் வெற்றி கொண்டதோடு நில்லாமல் அந்நாட்டின் தலைநகர் வரை சென்று அறவே அழித்து விடுவதும் உண்டு.

படை வலியால் குறைந்தவன், தனக்கு ஏற்புடைய காலமும், பிறர் படைத் துணையும் வரும் வரை, தன் கோட்டைக்குள்ளே அடங்கியிருப்பதும், அந்நிலையில், படையெடுத்து வந்தவன், அக்கோட்டிைக்குள் இருப்பார்க்கு, உணவும் பிறவும் புறத்தே இருந்து போகாதவாறு அக்கோட்டையை முற்றியிருப்பதும், முற்றுகை பலநாள் நீடித்து, அகத்தே அடங்கி இருப்பார்க்கு உணவு முதலாயின கிடைக்காது, தட்டுப்பாடு ஏற்பட்ட வழி,புறத்தே இருப்பானுக்குப் பணிந்து போவதும், அதற்கு மாறாக அகத்தே அடங்கி இருப்பான் பணியாது நிற்க,மேலும் முற்றுகை நீட்டிப்பின்,அகத்தே அடங்கி இருப்பானுக்கு வேறு படைத் துணை வருதல் கூடும் என்ற நிலை ஏற்படும்போது, வாளர்