பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

தமிழக வரலாறு-கரிகாற் பெருவளத்தான்

புலவர் பண்பு

போர் விளைவிக்கும் நாட்டழிவு கண்டு கலங்கும் நல் உள்ளம் வாய்ந்த பழந்தமிழ்ப் புலவர்கள், போர் நிகழா முன்பே, இரு அரசர்களையும் கண்டு அறிவுரை கூறிப் போரைக் கைவிடச் செய்வதும், போர் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிலையிலும், இருவர்க்கும் அறிவரை கூறி, போர் மேலும் தொடராவாறு செய்வதும் ஆகிய போர் ஒழிப்புப் பணிகளும் அக்காலை நிகழ்ந்தன.

போருக்காம் பல்வேறு காரணங்களையும், போரின் பல்வேறு நிலைகளையும், போரின் முடிவுகளையும், தொல்காப்பியப் புறத்திணை இயலும், புறப்பொருள் வெண்பா மாலையும் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளன.

மக்கட் படையின் சிறப்பு

உலக நிகழ்ச்சிகளில் போர் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. அதனால் நாட்டின் தலையாய உறுப்பாக நாற் படை அமைந்து விட்டது. உலகாளும் அரசர்க்கு உறுதுணை புரியும் அரிய பண்புகள் ஆறனுள்ளும், படையே தலையாய சிறப்புடையது என்ற கருத்தில், படைக்கு முதலிடம் கொடுத்து,

"படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு”

என எடுத்துரைத் துள்ளார் வள்ளுவர். நாட்டின் அமைதிக்கு நற்றுணை புரிவது அந்நாற் படையே என்பதை உணர்ந் துள்ளமையால் உலக அரசுகள் அனைத்துமே, அரசியல் பண்டாரங்க்ளின் பெரும் பகுதியைப், படை அமைப்புக்குச் செலவிட்டு வருகின்றன. -

படை அமைப்பும், அப்படையேந்தும் பட்ைக்கலங்களும் காலத்திற்குக் காலம், இடத்திற்கு இடம் வேறுபடக் காண்