பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் கா. கோவிந்தனார்

135

கிறோம். மலைப் பாறைகளையும், மரக்கிளைகளையும், படைக் கலங்களாகக் கொண்டு போரிட்ட வான்ரப்படை, கரடிப்படைகளை ஒரு காலத்தில் கண்டோம். வாளையும், வேலையும், வில் அம்புகளையும் படைக் கருவிகளாகக் கொண்டு போரிட்ட தேர்ப் படை, யானைப் படை, குதிரைப் படைகளைப் பிறிதொரு காலத்தில் கண்டோம்.

இவவாளு படையும் படைக்கலங்களும் வேறுபடினும், களத்தில் மக்கள் நின்று போரிட்ட நிகழ்ச்சியை முச்சங்க் காலத்திலும் கண்டோம், அதற்கு முந்திய காலத்திலும் கண்டோம், இராமாயண, பாரத இதிகாச காலங்கலிலும் கண்டோம். படை வரிசையுள் இடம் பெறுவன வானரம், கரடி, யானை, குதிரை போலும் உயிருடைப் பொருள்களே ஆயினும், அவற்றை இயக்க மக்கள் வேண்ட்ப்பட்டன ராதலின், படை வரிசையுள் தலையாய இடம் பெற்றுத் திகழ்ந்தது மக்கட் படையே.