பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17. பழந்தமிழ்ப் பேருர்ப் பண்பு

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்; உழுவார் உலகத் தார்க்கு ஆணி; உலகம் ஏர்ப்பின்னது என்ற உணர்வு வரப் பெற்றவர் தமிழர், அதனால், அவர்கள் தம் வாழ்க்கை வளர்க்கும் விழுமிய துணையாக வயல் வளத்தைக் கொண்டார்கள். உழவுத் தொழில் ஒன்றை மட்டுமே ஒம்பி வாழும் மக்கள், அவ்வுழு நிலங்களை அடுத்து வாழவே விரும்புவர். நிலத்துக்கு உரியவன், அந்நிலத்தை ஒவ்வொரு நாளும் சென்று பார்ந்து வரல் வேண்டும். அவன் அதில் தவறுவனாயின், தன்னைப் பராமுகமாக மதிக்கும். கணவனோடு ஊடிக்கொள்ளும் காதல் மனைவி போல், நிலமும் அவனோடு ஊடிக்கொண்டு நிறை பயன் அளிக்க மறுத்து விடும்.

செல்லான் கிழவன் இருப்பின் நிலம் புலந்து
இல்லாளின் ஊடி விடும்

இந்த உண்மையை உணர்ந்தவர்கள் ஆதனின் தமிழகத்து உழவர் பெரு-மக்களின் குடியிருப்புக்கள், அன்னார் விளை நிலங்களுக்கு அணித்தாக இடம் பெற்ற சிற்றுார்களாகவே அமைந்து விட்டன.

அதனால், தமிழகத்தில் பேரூர்கள் பெருக வாய்ப்பில்லாமல் போய் விட்டது. அரசியல் தலைமை, வாணிக வாய்ப்பு என்ற இவை போலும் காரணங்கருதி, ஒரு சில பேரூர்களே தோன்றின. ஆனால், அவ்வாறு தோன்றிய பேரூர்கள் ஒரு சிலவே என்றாலும், அவை, நவ நாகரீக.