பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் கா. கோவிந்தனார்

137

வளர்ச்சியின் இருப்பிடங்களாய்த் திகழ்ந்தன. நாகரீக வாழ்விற்குத் தேவைப்படுவன என்னென்னவோ அவை அனைத்தையும் அப்பேரூர்கள் பெற்றிருந்தன.

பேரூர்ப் பண்பு:

ஒரு பெரிய நகரம்; தன்னை நோக்கி வருவார்க்கு, அவர்கள் சிறிது சேய்மைக் கண் வரும்போதே, நகரம் நெருங்கிவிட்டது என்பதை ஒரு சில குறிப்புக்களால் அறிவித்து விடும். இரவாயின். பேரூர்த் தெருவுகளிலும், அத்தெருவுகளின் இருமருங்கிலும் வானளாவ உயர்ந்தி ருக்கும் மாடங்களிலும் ஏற்றப்படும் எண்ணற்ற விளக்கு களின் ஒளிகளெல்லாம் ஒன்று திரண்டு ஒளிப்பிழம்பாகி உயரத்தே படர்ந்து, சேய்மைக்க்ண் வருவார்க்கும் நகரம் நெருங்கிவிட்டது என்பதைத் தெரியக் காட்டும். பகலாயின், அப்பேரூரில், எழும் பல்வேறு ஒலிகளும் ஒன்று கலந்து, கடல் அலையொலி போல் பேரொலியாகி, அந்நகர் நோக்கிச் செல்வாரின் கண்களுக்கு அந்நகர் காட்சி அளிப்பதற்கு முன்பே, அவர் காதுகளில் புகுந்து, நகர் நெருங்கி விட்டது என்பதைப் பறைச் சாற்றும், பல்வேறு மணங்கள் அவர்களுக்கு நல்வரவு கூறும். பேரூர்களுக்கு உரியவை எனப் பாராட்டப் பெறும் இப்பண்புகளைத் தமிழகத்துப் பேரூர்கள் குறைவறப் பெற்றிருந்தன.

மதுரை இன்னமும் எத்தனை காவதம் உளது? என்று கேட்ட கோவலனுக்கு, சந்தன மணம் ஒன்றே நாறும் பொதியத் தென்றல் போலாது, அகில், சந்தனச் சாந்துகளும், குங்குமக் குழம்பும் கலந்த மணக் கலவையில் திளைத்து, மல்லி, முல்லை, மாதவி, கழுநீர், செண்பகம் ஆகிய மலர்களின் மணத்தை வாரிக்கொண்டு, அட்டிற் சாலைகளின் தாளிப்புப் புகை, அங்காடிகளின் பணியாரம் , சுடு புகை, செல்வர்கள் தங்கள் ஆடை அணிகளுக்கு மணம் ஊட்ட எழுப்பும் அகிற்புகை, வேதியர் வேள்விப்