பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் கா. கோவிந்தனார்.

139

இதே போல், தமிழ்நாட்டின் தலையாய நகரங்களெல்லாம், பேராற்றங்கரைகளிலேயே இடம்பெற்றன. சேர நாட்டுத் தலைநகராம் கருவூர், பொருநைக் கரையிலும், சோழநாட்டுத் தலைநகர்களாம், புகாரும், உறையூரும், காவிரிக் கரையிலும், பாண்டியர் தலைநகராம் மதுரை வைகைக் கரையிலும், தென்பாண்டித் தலைநகராம் நெல்லை, தாம்பிரபரணிக் கரையிலும், பல்லவர் தலைநகராம் காஞ்சி, பாலாற்றங்கரையிலும் இடம்பெற்றிருந்தன.

அரண்

ஒரு நாடும், அந்நாட்டின் தலையாய நகரங்களும், நீரரண், நிலவரண், மலையரண், காட்டரண் என்ற, இயற்கை பரண்கள் நான்கையும் பெற்றிருத்தல் வேண்டும். என்பதை உணர்ந்திருந்த தமிழ் மக்கள், அந்நால்வகை அரண்களையும் இயற்கையில் பெற இயலா இடங்களில் அமைந்த நகரங்களுக்கு, அவ்வரண்களைத் தம் முயற்சியால் செயற்கையில் ஆக்கி அளிக்க எண்ணினார்கள். அவ்வாறு எண்ணிய அவர்கள், அந் நால்வகை அரண்களுள், மலையரண், தம்மால் ஆக்குதல் இயலாது என்பதால், அது ஒன்றைக் கைவிட்டு, ஏனைய மூவரண்களையும் ஆக்கி அளித்தார்கள், நகரங்களைச் சூழக்காடுகளை வளர்த்தார்கள். காட்டரணை அடுத்து ஆழ்ந்த அழிகளைத் தோண்டினார்கள். காட்டை அழித்து, அகழியைத் துார்த்துப் பாய்ந்து வரும் பகைவர் படைகளைப் பாழ் செய்யும் தம் படை வீரர் இருந்து போரிட, அகழிக்கும், மதிலுக்கும் இடையில் பெரு நிலப்பரப்பை வைத்தார்கள். அப்பெரு நிலப்பரப்பைப் புற நகர் என அழைத்தார்கள். புறநகரை அடுத்து மதில் எழுப்பினார்கன். மதிலின் அகத்தே, அரண்மனை அமைத்தார்கள்; அப்பகுதியை அகநகர் என்றார்கள்.

பேரூர் அமைப்பு

ஆறு, ஆற்றைக் கடந்தால் காவற்காடு, காவற் காட்டைக் கடந்தால் அகழி, அகழியைக் கடந்தால்