பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் கா.கோவிந்தனார்

141

பெறும் வளத்தோடு. அவ்வாறுசுள் அரணாகப் பயன்படல் கருதியே, அக்காலப் பேரூர்கள் பெரும்பாலும் ஆற்றங் கரைகளில் இடம் பெற்றன. அத்தகைய ஆறோ, கடலோ இல்லாத இடங்களில் அமைந்த நகரங்களைச் சூழ ஆழமான பெரிய நீர் நிலைகளைத் தோண்டி வைத்தார்கள் அத்தகைய பெரிய நீர் நிலைகளே அகழாம், அது கிடங்கு என்றும் அழைக்கப்பெறும். கிடங்கு, அளந்து காணமாட்டா ஆழமும் அகலமும் வாய்ந்தது. மண் உள்ளளவும் தோண்டப்பட்டது; கல்லை அகழ்ந்தும் காணப்பட்டது. வற்றாப் பெருநீர் நிலைகளில் மட்டுமே வாழும் இயல்பினவாய முதலைகள் வாழுமளவு ஆழம் வாய்ந்தது. மதிலை, மோதும் பேரலைகள் தோன்றி வீசுமளவு கடல்போலும் பரப்புடையது எனப் புலவர்கள் அகழின் ஆழத்தையும் அகலத்தையும் பாராட்டியுள்ளார்கள்.

அரணாகப் பயன்பட்டதோடு, அகழி, அறிதொரு வகையானும் பயன்பட்டது. பேரூர்களில் பெய்யும் மழை நீரும், நகரமக்கள் தத்தம் மனைகளில் கழித்து விடும் கழிநீரும் போக்கிடம் அற்று நகரப் பெருந் தெருக்களில் தேங்கி, மக்களுக்குப் பிணி விளைக்கும் பெருங்கேடாய் மாறிவிடாமல், அந்நீர் சென்றடையும் இடமாய் அமைந்து அகழி, அந்நகர்களின் நல்வாழ்விற்கும் நற்றுணை புரிந்தது.

மனைகளில் மகளிர் நீராடிக் கழிக்கும் கலவை நீரும், பொதுக் குளங்களில் மூழ்கி எழுவார் ஆடிக் கழிக்கும் சிந்தனம் மணக்கும் நீரும், விழா நாட்களில் விழாவிற்கு வருவார் மீது வீசும் வாசனை நீரும், அந்தணர், ஆன்றோர்களை வழிபடும் அடியார்கள், அன்னார் அடிகளை வழிபட்டுக் கழுவிக் கழிக்கும் நீரும், வண்ணமும், சுண்ணமும் போலும் மண்ப்பொருள் ஆக்குவார், அம்மணப்பொருள் களை அரைத்துக் கழித்து விழும் நீரும், ஒன்று கலந்து சுருங்கைகள் வழியே ஓடி அகழியை அடையும். அதனால் அகழி