பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

145

புலவர் கா. கோவிந்தனர்

வாயிலும் கதவும்

பேரூர் வாழ் மக்கள், புறத்தே போய் வரவும், பிறரெல்லாம் பேரூர்க்கு வந்து செல்லவும் வழி செய்வது வாயில். வாணிகம் கருதி வரும் பல்வேறு வண்டிகளும், பல்வேறு நாட்டு மக்களும், வேந்தர்களின் நாற்படைகளும் வழங்குங்தற்கேற்ப,பேரூர் வாயில் அகலமும், உயர்வும் உடையதாக அமைக்கப்பட்டது. தேர்ப் படைகள், தம்மீது ஏற்றிய வெண் கொற்றக் குடைகளும், வெற்றிக் கொடிகளும் சிறிதும் தாழாது நின்று நிழல் செய்து பறக்கும் நிலையிலேயே உட்புகுதற்கேற்ற உயர்வுடையவாகவும், பெரு வெள்ளம் பாயும் பேராற்றுப் படுகை போலும் அகலம் உடையவாகவும் அவ்வாயில்கள் அமைக்கப்பட்டன.

பேரரசின் தலைநகராகவும், பெரிய வாணிக மாகவும் விளங்கிய அப் பேரூர்களுள், பகை நாட்டு ஒற்றர்களும் வீரர்களும் தம் உருவு கரந்து புகுந்து அழிவு. வேலைக்கு அடிகோலவும் கூடும் ஆதலின், வாயில்கள், வீரர்களால் காக்கப்பட்டன. வாயில் காவலர், உட்புகுவார் ஒவ்வொருவரையும், ஒவ்வொரு பொருளையும் ஐயமறத் தெளிந்த பின்னரே உட்புக விடுவர். தமிழ் நாட்டுப் பழம் பெரும் நகரங்களின் வாயில்களைக் காத்து வந்த யவன வீரர்களையும், அவர்தம் காவல் சிறப்பையும், "கடிமதில் வாயில் காவலிற் சிறந்த அடல் வாள் யவனர்" எனப் புலவர்கள் பாராட்டியுள்ளார்கள்.

வாயில் முகப்பில், காற் சிலம்பு, தழையாடை, பந்து, பாவை முதலாம் மகளிர்க்குரிய ஆடை, அணி, ஆடும் கருவி களைக் கட்டி நாலவிட்டு வைப்பர். அவை, அப்பேருரை முற்றி அழித்துக் கைப்பற்றிக் கொள்ளும் கருத்தோடு வந்து வளைத்துக் கொள்ளும் பகையரசர்களுக்கு, வேந்தர்காள்! இவ்வரணை வெற்றி கொள்வது உங்களால் இயலாது! ஆகவே அவ்வெண்ணத்தைக் கைவிட்டு அமையுங்கள். அது