பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் கா. கோவிந்தனர்

147

காற்றாலும், மழையாலும், காயும் வெயிலாலும் கெட்டுப் போகாவாறு நெய் பூசப்பெறும். அவற்றில் செதுக்கப் பெறும் அன்னம், மான்போலும் அழகிய வடிவங்கள், அக் கால அரசர்களின் கலையார்வத்தைக் காட்டுவனவாம்.

கதவுகளுக்குக், கலையார்வம் காட்டும் இவை போலும் ஓவியங்கள் ஒரு பால் அழகு செய்ய, அக்கதவுகள், அந்நாட்டு அரசர்களின் அடையாளச் சின்னங்களையும், அவர் களின் வெற்றிப் புகழ் காட்டும் சின்னங்களையும் பெற்றுத் திகழும். சேரநாட்டுத் தொண்டி நகரத்து வாயிற் கதவில், சேரர் பகைவன் மூப்பன் என்பானுடைய பற்களும், சோணாட்டு மத்தி என்பானுக்குரிய வெண்மணி வாயில் என்ற மாநகரத்து வாயிற் கதவில் அவன் பகைவன் எழினி என்பானின் பற்களும் பறித்துப் பொறுத்தி வைக்கப் பெற்றிருந்த செய்தியைப் புலவர்கள் பாராட்டியுள்ளார்கள்.

இடை நகர்

வாயிலைக் கடந்து நகருள் புகுந்ததும் முதற்கண் வருவது இடைநகர் நாற்புறமும் மதில்சூழ, நடுவே இருக்கும் நகரம், ஒரே நகராய்த் தோன்றினும், அது இடைநகர், அங்காடி, அகநகர் என்று மூன்று. பிரிவுகள் உடையதாய் அமைந்திருக்கும். மதிலுக்கும், அங்காடிக்கும் இடைப்பட்ட பகுதி இடைநகரம். இடை நகர்க்கும் அகநகர்க்கும் இடைப் பட்ட பகுதி அங்காடி ஆகும். அங்காடி சூழ, நகரின் நடுவே அமைந்திருந்த பகுதி அகநகராகும்.

உடல் உழைத்து உயிர் ஓம்பும் தொழிற் மேற்கொண்ட வறியோர்களின் வாழிடமாகவும், உயர்ந்தோரால் ஒழுக்கக் குறைபாடுடையவர் என ஒதுக்கப்பட்டோரின் வாழிட மாகவும் அகநகர் இடம்பெற்றது. இடைநகரின் முதல் வீதி வாயில் காவலரின் வாழிடமாம். அவ் வீதியை அடுத்து