பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

தமிழக வரலாறு-கரிகாற் பெருவளத்தான்

இருந்தது பரத்தையர் தெருவு. பரத்தையர் விதிகளை அடுத்து, மீன், உப்பு, கள், அப்பம், பிட்டு, வெற்றிலை போலும் வறியோர்கள் வாங்கத்தக்க விலை மலிந்த பொருள்களில் வாணிகம் புரிவார் வாழ்ந்திருந்தனர். அன்னார்.'வாழிடங்களை அடுத்து, மாடமாளிகைகளைக் கட்டித் தரும் சிற்பி, தச்சர், கொல்லர், கலங்கள் வனைந்து தரும் செம்பு கொட்டி, பட்டாலும், மயிராலும், பருத்தி நூலாலும் ஆடைகள் நெய்து தரும் நெசவாளர், மாலை கட்டிகள், கால்க்கணிகள், பண் இசைக்கும் பாணர், சங்கறுத்து வளையல் பண்ணுவோர், முத்துக் கோப்போர், பவளத்துக்குத் தொளையிடுவார் ஆகியோர்களின் வாழி டங்கள் இடம் பெற்றன.

அங்காடி

இடைநகர், வறியரும் அகநகர்ச் செல்வரும் ஒருங்கே வந்து வாணிகம் செய்வதற்கு வாய்ப்பளிக்கும் வகையில், அவ்விரு பகுதிகளுக்கும் இடைப்பட்ட இடத்தில் அங்காடி அமைந்திருந்தது, அங்காடி, காலை முதல் மாலை வரை தொழில் புரியும் நாளங்காடி, மாலை தொடங்கி விடியும் வரை தொழில் புரியும் அல்லங்காடி. என இரண்டாகப் பிரிந்து விளங்கின. நாளங்காடியில், மக்கள் வெயில் வெப்பத்தால் வருந்தாவாறு நிழல்தரும் மரங்களை வரிசை வரிசையாக வளர்த்திருந்தனர். வாங்கவும் விற்கவும் வந்து கூடும் மக்கள் எழுப்பும் பேரொலி, கடலலை போல் நீங்காது ஒலித்துக் கொண்டேயிருக்கும். குதிரை வண்டி முதலிய வண்டி வகைகள், கொடிஞ்சி முதலிய தேர் உறுப்புக்கள், கவசம், கையுறை, அங்குசம் முதலிய போர்க்கருவிகள், அரியாயோகம் முதலிய மருந்து வகைகள், வாசவுண்டை, வெண்கவரி, ஒவிய வரைபடங்கள், செம்பாலும், வெண்கலத்தாலும் உருவாக்கப்பட்ட புதுக் கலங்கள், வண்ணமலர் மாலை வகைகள், வாளால் அறுத்துச் செய்யப்