பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

தமிழக வரலாறு-கரிகாற் பெருவளத்தான்

அதை அடுத்து அமைச்சர் விதி; அதற்கு அப்பால் படைத் தலைவர் முதலாம் அரசியல் பணியாளர் வீதிகள். இவை அனைத்தையும். கடந்து சென்றால், நகரின் இடையே நடு. நாயகமாய் இடம் பெற்றிருப்பது அரசன் பெருங்கோயில்.

அரண்மனையைச் சூழ்ந்து, அரசர்கள் சென்று வரலாகும் அணிமைக்கண், செய்குன்றும், நன்னிர்ப் பொய்கையும், இளமரக்காவும் இடம்பெற்றன. களிறுகளை யும், குதிரைகளையும் ஓடவிட்டுப் பழக்கும் பெருவெளிகள் இருப்பதும் ஆண்டே மன்றங்களும், பொதியில்களும், அறச்சாலைகளும் அவ்வக நகரிலேயே இடம் பெற்றிருந்தன.

தெருவமைப்பு

இரண்டு பக்கத்திலும் வானளாவ உயர்ந்த மாடங்கள் விளங்சு, அகன்று தோன்றிய அகநகர் வீதிகள், உயர்ந்த இருகரைகளுக்கிடையே பரந்து ஒடும் பேராற்றின்காட்சியை நினைவூட்டும். அரசரும், அரசர்நிகர் செல்வரும், வாழும் அகநகர் வீதிகளில், வாணிகர்கள், வண்ணக்குழம்பு, சுன்னப் பொடி, சந்தனச்சேறுமணம் நிறைமலர், புகைதரு பொருள்கள் ஆகிய பொருள்களைக் கொண்டு சென்று விற்பர்.

அரசர் பிறந்த நாள், அவர் அரியணை அமர்ந்தநாள், அவ்ர் அமரில் வெற்றி கொண்டநாள், முதலாயின குறித்தும், ஆதிரை, உத்திரம் முதலாம் தெய்வத் திரு நாட்கள் குறித்தும் அகநகர் வீதிகளில் விழா கொண்டாடப் படும். விழாக்காலங்களில் 'வீதிகள் நன்கு ஒப்பனை செய்யப்படும். கோயில் விழாக் குறித்தும், கொற்றவன் வெற்றி குறித்தும், வாணிகம் வளம்காட்டல் குறித்தும், புல்மைநலம் பாராட்டில் குறித்தும் நகரவீதிகளில் ஏற்றி வைக்கும் கொடிகள் ஆடி நிழல் அளித்து அணி செய்யும்.