பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் கா.கோவிந்தனார்

151

மன்றமும் பொதியிலும்

பேரூர்களின் நடுவே பேணி வளர்த்து வைத்திருக்கும் நிழல்தரும் ஆல், மருந்தாகிப் பயன்தரும் வேம்பு, சுவைமிகு கனி தரும் மா, புலா, விளாம், இலந்தை, முதலாம் மரத் தடிகளில் அமைந்திருக்கும் மேடைகளே 'மன்றங்களாம், அரசனைப்பாடிப் பரிசில் பெறும் கருத்தோடு வரும் பாணர், கூத்தர், பொருநர், புலவர் போலும் புதியவர்கள், வழிநடை வருத்தம் தீர ஒய்வு கொள்வது அம்மன்றங்களில் தான். நகரமக்கள் ஆட்டுக்கிடாய்ச் சண்டை, கோழிச்சண்டை, முதலாயின விட்டுக் கண்டு களிப்பதும் ஆண்டே, அம்மன்றங்கள் தான், ஊர்ச்சிறுவர்களின் விளையாடரங்குகள். உழைக்கும் பருவம் கடந்து போன நிலையில் வட்டாடிப் பொழுது போக்கும் முதியோர்களின் பொழுது போக்கு இடங்களும் அம்மன்றங்களே. அம்மன்றங்கள் தான் அறங்கூர் அவைகளாகவும் பணிபுரிந்தன.

சோலையும் செய்குன்றும்:

அரசனும், அவன் உரிமைச் சுற்றமும் மட்டுமே கண்டு களிக்கும் காவற்சோலையும், மக்கள் மனம் களிக்கச்சென்று உலாவரும் மலர்ச் சோலைகளும் பழந்தமிழ்ப் பேரூர்களில் இடம் பெற்றிருந்தன. அரசர்க்கு உரிய சோலைகள் உய்யானம் என்றும், மக்கட்கு உரிய சோலைகள் உவவனம் என்றும் அழைக்கப்பட்டன.

மன்னர் குலத்தவரின் புனலாட்டு வேட்கையைத் தணிப்பதற்கான நீர் நிலைகளும், அப்பெரு நகரங்களில் இடம் பெற்றிருந்தன. நாற்புறங்களிலும் மணம் தரும் மலர் மரங்கள் வளர்ந்து நிழல் செய்ய, இடையே, நீரை வேண்டும்போது வேண்டுமளவு நிறைக்கவும் போக்கவும் வல்ல பொறிகள் அமையப்பெற்ற பொய்கைகள்: தோண் டப்பட்டிருந்தன: அவ்விடம் இல்வந்திகைச் சோலை என