பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

தமிழக வரலாறு-கரிகாற் பெருவளத்தான்

இவ்வாறு, திருவாளர் அய்யங்கார் அவர்களின் காரணங்கள் சிலவற்றை மறுத்துவிட்ட பேராசிரியர் இராமச்சந்திரன் அவர்கள், திருமாவளவன் வேறு கரிகாலன் வேறு என்பதற்காகப் பின்வரும் காரணங்களைக் கூறியுள்ளார்.

1.பொருநராற்றுப்படை, கரிகாலன், தன் அரச உரிமையை, அவன், தன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே பெற்று விட்டான் என்கிறது.40 ஆனால், பட்டினப் பாலையோ, கரிகாலன், தனக்கு உரிய அரசைப் பெறுவதன் முன்னர்ச் சிறையில் இருந்தான் என்கிறது.41

2.மேலும், பொருந்ராற்றுப்படை, கரிகாலன் பிறந்து, தவழத் தொடங்கிய காலத்திலேயே அரச உரிமையைத் தோளில் தாங்கிக்கொண்டான் என்கிறது.42 மேலும், அதே நூல், கரிகாலன் தன் இளமைப் பருவத்திலேயே வெண்ணிப்போரில் ஏனைய இரு பேரரசர்களை வென்றான் என்றும் கூறுகிறது.43 கரிகாலன் வெற்றிச் செயல் புலி, குட்டியாக இருக்கும் போதே, பெரிய ஆண் யானையை வீழ்த்திய செயலோடு ஒப்பிடப்புட்டுள்ளது. ஆகவே, இப்போர், அவன் இளமைப் பருவத்திலேயே நடைபெற்றதாதல் வேண்டும். இதிலிருந்து, கரிகாலன் சிறைபடுமளவு ஆற்றல் குறைந்தவனாக இல்லை என்பது பெறப்படுகிறது.

3.பொருநராற்றுப் படை, கரிகாலன், தமிழ் அரசர் இருவரை வெற்றிகொண்டான் எனக்கூறும்போது, பட்டினப்பாலை அவன், பாண்டியன், ஒருவனை வென்றதாகக் கூறுகிறது.44

4.இவை அல்லாமல், திருமாவளவனின் வடநாடு வெற்றி, குறித்துக் கூறும் பட்டின்ப்பாலை, சிலப்பதிகாரப் பாடல்களுக்கு இடையிலும் ஒத்த கருத்து இல்லை. சிலப்பதிகாரம், திருமாவளவன், இமயம் வரை சென்று