பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர். கா. கோவிந்தனார்

21

அதன் மீது தன் புலிச் சின்னத்தைப் பொறித்து மீண்டான் என்றும், தென்னாட்டில் பகைவர் இல்லை. ஆகவே, பகைவர் தேடி அவன் வடநாடு சென்றான் என்றும் கூறுகிறது.55 ஆனால், பட்டினப்பாலையோ, அவன், வடக்கிலும், மேற்கிலும், கிழக்கிலும் வெற்றி பெற்றான் என்றுதான் கூறியுள்ளது.56 இமயப் படை யெடுப்பு பற்றிக் குறிப்பிடவில்லை. இமய வெற்றி, பட்டினப்பாலை ஆசிரியரால், கூறாமல் விடப்படுமளவு, சிறிய வெற்றி அன்று: ஆகவே பட்டினப்பாலை திருமாவளவனும், சிலப்பதிகாரத் திருமாவளவனும் ஒருவர் அல்லர்.

5.புறநானூறு பெருந்திருமாவளவன் என்பவன் ஒரு வனைக் குறிப்பிடுகிறது.57 இதன் மூலம் இரண்டு திருமாவளவன்கள் (மூத்தவன்; இளையவன்) இருந்தனர் என்பதும், திருமாவளவன் எனும் பெயர் உடையார் ஒருவர்க்கு மேற்பட்டவர் இருந்தனர் என்பதும் பெறப்படுகிறது.

6.முதலாம் இராசராசனின், 'லெய்டன் செப்பேடுகள்'58 (Leyden Grants): முதலாம் இராசேந்திரனின் திருவாலங்காடு செப்பேடு59, வீரராசேந்திரனின் கன்னியகுமரிக் கல்வெட்டு60, ஆகிய இம்மூன்று ஆவணங்களும், கரிகாலன் காவிரிக்குக் கரை கட்டியதைக் கூறுகின்றன. ஆனால் இமயப் படையெடுப்பு குறித்து ஏதும் கூற வில்லை. இமயப் படையெடுப்பு என்பது மிகச்சிறிய வீரச் செயலாகாது, மிகப் பெரிய வீரச் செயலாதலின், அது உண்மையில் நடந்திருக்குமாயின், இம்மூன்று கல்வெட்டுக்களும் அதைக் குறிப்பிடாமல் தவிர்த்து இரா.

7.சேரவேந்தன் நெடுஞ்சேரலாதன், இமயத்தே வில்பொறித்தமையால், அச்செயலை அவன் பெயரோடு இணைத்து, அவனை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்61 என அழைப்பது போல், கரிகாலனின் இமயப்