134
16. ஆதன் அழிசி
ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியனின் துணைவன் அவனால் பாராட்டப் பெற்றவன் 37
17. ஆதன் எழினி
சோணாட்டுக் கடற்கரை நகரங்களுள் ஒன்று செல்லூர் அவ்வூருக்குக் கிழக்கே கோசர்க்குரிய நியமம் என்ற ஊர் இருந்தது. வேந்தர் குலத்தை வேரறுத்த பரசுராமன் வேள்வி செய்த சிறப்புடையது செல்லுரர். அத்தகைய புகழ் மிக்க செல்லுனர்க்கு உரியவன் ஆதன் எழினி. பெரிய வேல் வீரன்; அவன் எறியும் வேலேறுண்ட யானைகள் கலங்கி அழிவுற்றுப் போகும். ஆதன் எழினியின் வரலாறு அறிய உதவும் பாடல்களைப் பாடிய புலவர்கள் மதுரை மருதன் இளநாகனாரும்38, ஐயூர் முடவனாரும்39 ஆவர்.
18. ஆதனுங்கன்
வேங்கட மலைக்கு உரியவன்: சேரர் குலத்தவன் என்று கருதப்படுபவன். இரவலர் போற்றும் வள்ளல் புலவர் கள்ளில் ஆத்திரையனார்பால் பேரன்பு கொண்டு விளங்கியவன். அவரால் பாராட்டப் பெற்றவன்40.
19. ஆந்தை
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியனின் துணைவன் “மன்னெயில் ஆந்தை" "நிலை பெற்ற அருண் உடையான்" என அவனால் பாராட்டப் பெற்றவன்.41