உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

137



26. இருங்கோவேள்

வடபால் முனிவன் ஒருவன் இயற்றிய வேள்வியில் தோன்றிய பதினெண் வேளிர் மரபில் தோன்றி, துவரையில் இருந்து அரசாண்ட மரபின் நாற்பத்தொன்பதாம் தலைமுறையினன்.51 அரையம் என்ற நகரின் தலைவன்52 புலி கடிமால் என்றும் அழைக்கப் பட்டவன்53 பாரி மகளிரை மணமுடிக்க வேண்டும் என்று கபிலர் இருங்கோவேளிடம் வேண்டியும், மூவேந்தர் பகை எண்ணி அம்மகளிரை மணக்க மறுத்தவன்54. கரிகாலன் பகைவனாய் விளங்கி அவனால் வெற்றி கொள்ளப்பட்ட இருங்கோவேளும்55 இவனும் ஒருவரோ, வேறுவேறானவரோ என்பது ஆராய்ந்து அறிய வேண்டிய ஒன்று.

27. இளங்கண்டீரக்கோ

தோட்டி மலைத் தலைவனான வள்ளல் கண்டீரக் கோப்பெரு நள்ளியின் உடன் பிறந்தான். விச்சிக்கோன் தம்பி இளவிச்சிக்கோவின் நண்பன். இருவரும் ஒருங்கிருந்தகாலை, ஆண்டு வந்த புலவர் பெருந்தலைச் சாத்தனார் இளங்கண்டீரக்கோவை மட்டும் தழுவி நிற்க, விளக்கம் கேட்ட இளவிச்சிக்கோவிற்கு, இளங்கண்டிரக்கோவின் குடிச்சிறப்பையும் பண்பு நலத்தையும் புலவர் விளக்கினார், என்பர்56.

28. இளங்குமணன்

வள்ளல் பெருந்தகை குமணனின் இளவல். அண்ணன் புகழ் கண்டு மனம் பொறாது, நாட்டைத் தானே ஆள விரும்பியவன். குமணன் நாடு விட்டு காடு