உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12



இமயவம்ரபன் நெடுஞ்சேரலாதன்.

சேர வேந்தர்களுள் சிறந்தோனாகிய செங்குட்டுவனையும், சிறந்த பெரும் புலவராய், நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தை ஆக்கித் தக்தருளிய இளங்கோவடிகளையும் பெற்றெடுத்த பெருமைசால் பேரரசன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன். சேரலாதன் எனவும், குடவர் கோமான் நெடுஞ்சேரலாதன் எனவும், குடக்கோ நெடுஞ்சேரலாதன் எனவும் அழைக்கப்பெறும் இவ்வேந்தன், பாரதப் போர் வீரர்க்கு, அப்போர் முடியுங்காலும் சோறளித்துப் புரந்தான் எனப் போற்றப்படும் உதியஞ் சேரலாதன் மகனாவன். இவன்தாய், வெளியன் வேண்மான் எனும் வேளிர் குலத் தலைவன் மகளாகிய நல்லினி என்பாள். இவனுக்கு மனைவியர் இருவர். ஒருத்தி சோழன் மணக்கிள்ளியின் மகளாகிய நற்சோணை, மற்றொருத்தி, வேளாவிக் கோமான் பதுமன் என்பான் மகள். முன்னவள் வழியாகச் செங்குட்டுவன், இளங்கோவடிகளாரும், பின்னவள் வழியாகக் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல், ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் பிறந்தனர். இவன் தம்பியாம் சிறப்புடையோன், பல்யானைச் செல் கெழுகுட்டுவன்.

நெடுஞ்சேரலாதன், இமயமும், குமரியும், இருபால் எல்லைகளாகப் பெருநிலம் முழுதாண்டபேரரசனாவன்13 படையுடன் வடநாடு சென்று, ஆரிய அரசர்களை வென்று, அவ்வெற்றிக்கு அறிகுறியாக, இமயமலை மீது, தன் அரசு இலாஞ்சனையாகிய வில்லைப் பொறித்து மீண்டான்.14

அவ்வடநாட்டுப் போரில், பணிய மறுத்த யவன அரசர்களை வென்று, அவர் தலையில் நெய்யைப் பெய்-