உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52


பால் கொண்ட காதல் மிகுதியால், ஆதிமந்தியும் உடன் சென்று அவனை மீட்டாள்.45

கரிகாலனைப் பாடிய புலவர்கள் உருத்திரங் கண்ணனார், கடியலூர் உருத்திரங்கண்ணனார், கருங்குளவாதனார், பரணர், மாமூலனார், முடத்தாமக் கண்ணியார், வெண்ணிக் குயத்தியார் ஆகிய எழுவராவர். அவன் வாயில், "நகையுநர்க்கு அடையா நன் பெரும்வாயில்" எனப் புகழப்படும். தன்னைப் பட்டினப்பாலை மூலம் பாராட்டிய கடியலூர் உருத்திரங்கண்ணனார்க்குப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசு அளித்த பெருங்கொடையாளன்.46

பெருஞ்சேரலாதனைத் தோற்கடித்த கரிகாலன் வேறு; சிலப்பதிகாரம் கூறும், இமயம் வரை சென்ற திருமாவளவன் என அழைக்கப்படும் கரிகாலன் வேறு எனக் கூறுவாரும் உளர். அதுபொருந்தாது, இருவரும் ஒருவரே என்பது, தென் இந்திய சைவ சித்தாந்த நூற் பதிப்புக்கழகம் வெளியிட்ட "திருமாவளவன்"47 "சோழர்"48 என்ற நூல்களில் விரிவாக விளக்கியுள்ளேன், ஆண்டு கண்டு கொள்க.

குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்

இவன் வரலாறு அறியத் துணைபுரியும் புறநானூற்றுப்பாடல்கள் நான்கு. அந் நான்கின் கீழும் கொடுக்கப்பட்டிருக்கும் கொளுக்கள் அனைத்தும், குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் என்றே குறிப்பிட்டுள்ளன. அவனைப் பாடிய புலவர்கள் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் (புறம்.58)