பக்கம்:தமிழக வரலாறு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்

109


ததும், கரிகாலன் இமயம் சென்றதும், புலியும் வில்லும் பொருந்திய இமய நெற்றியில் பாண்டியன் கயல் பொறித்ததும் இலக்கியங்களின் வழிக்காணும் வரலாறுகளாகும். அவைகள் அத்தனையும் உண்மை என்பார் சிலர். அத்தனையும் பொய் என்பார் சிலர். எது எப்படியாயினும், செங்குட்டுவன், கரிகாலன், நெடுஞ்செழியன் ஆகிய வேந்தர் ஆண்ட அந்தக் காலத்திலே வேங்கடத்தின் வடக்கிலே வாழ்ந்தோருடன்-இமயம் வரை-தமிழர் கலந்து நட்புடன் பழகினர் என்பது தேற்றம். இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பே கங்கையும் இமயமும் தமிழர் நன்கு அறிந்த ஆறும் மலையுமாய் விளங்கின என்பதும், அவற்றோடு தமிழர் தொடர்பு இருந்தது என்பதும் தேற்றம். ஆயினும், அந்த நாட்களிலும் தமிழகம் வட நாட்டாருக்கு அடிமையாக மட்டும் இருந்ததில்லை என்தும், நட்பு முறையில் தூதுவர் இரு நாடுகளுக்கும் செல்லும் வழக்கம் உண்டு என்பதும் அறியக் கிடக்கின்றன. இது வரையில் நாம் கண்ட கால எல்லை வரலாற்றுத் தொடக்கத்தை ஒட்டிய கால எல்லையாகும், அக்கால எல்லைக்கு நெடுங்காலத்துக்கு முன்புதான் மொகஞ்சதாரோ. ஆரப்பா நாகரிகங்களும், ஆரியர் வருகைக்கு முன் அமைந்த இந்தியாவும் அவற்றில் வாழ்ந்த பழந்தமிழ்க் குடிகளின் வாழ்க்கை முறைகளும் பேசப்படுகின்றன; அவற்றை வாய்ப்பு வந்துழி நாடு காண நன்கு எடுத்துக்காட்டல் அறிஞர் கடன் என்று கூறி இந்த அளவில் அமைகின்றேன்.

எப்படி வந்தனர்?

வடநாட்டுக்கும் தென்னாட்டுக்கும் நெடுங்காலமாகத் தொடர்பு இருந்தது என்பர் வரலாற்று ஆய்வாளர். முன் பகுதியில் கண்டபடி, சிந்துவெளி நாகரிகத்தைக் கண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/111&oldid=1357861" இலிருந்து மீள்விக்கப்பட்டது