பக்கம்:தமிழக வரலாறு.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்

113


யோசனைத் தூரத்தில் இருந்தது என்கிறார் P.T. சீனிவாச ஐயங்கார் அவர்கள்.[1] அந்தப் பஞ்சவடி இப்போது மத்திய மாகாணத்திலோ அன்றிப் பம்பாய் மாகாணத்திலோ சாத்பூரா மலைகளுக்குப் பக்கத்தில் இருக்கும் பகுதியாகும். எனவே, அவர்தான் பொதியமலையில் இருந்தார் எனல் பொருந்தாது. ஆக புராண அகத்தியரும் கம்ப இராமாயண அகத்தியரும் ஒருவராய் இருக்க, தொல்காப்பியரின் ஆசிரியர் வேறு அகத்தியராய் இருத்தல் முறைதானே! இவரைப் பற்றித் தனியாகத் தமிழ் முனிவர் எனவே நாடவிட்ட படலத்தில் கம்பரே காட்டுகிறார்.

இதிகாசங்களிலே தமிழகம் :

இனி, வான்மீகி இராமாயண காலத்திலேயே சேர சோழ பாண்டிய அரசுகள் இருந்தனவென்றும் தென்திசை நோக்கிச் சென்ற வானர வீரர்களை அழைத்துச் சுக்கிரீவன் அம்மூன்று நாடுகளிலுங்கூடத் தேடச் சொன்னான் என்றும் வான்மீகி கூறியுள்ளதாகவும் P.T. சினி வாச ஐயங்கார் குறித்துள்ளார்.[2] ஆயினும் கோதாவிரிக்குத் தெற்குப்பகுதி பூராவும் இராவணன் ஆட்சிக்கு உட்பட்டமையின் அங்கே மூவேந்தர் ஆட்சி இருந்திராதென்றும், ஒரு வேளை இராவணன் மறைவின் பின்பே அவர் தோன்றியிருக்க வேண்டுமென்றும் கூறுவர் சிலர். அவர் கூற்றுப் பொருந்தாது. ‘பாண்டியன் இருந்திருப்பானாயின் இராமன் அவன் நாட்டிலிருந்து அனை கட்டும்போது அவனைப் பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லையே’ என்கின்றனர். அவன் குறிப்பன்றேனும் கோதாவிரித் தெற்கு முழுதும் இராவணன் ஆட்சியில் இருக்குமாயின், இராமன் எவ்வாறு ஒரு தடையும் இன்றித் தென்கோடி வரையில் வந்திருக்க முடியும் என்ப-


  1. History of the Tamils. p. 55
  2. lbid, p. 52

8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/115&oldid=1357900" இலிருந்து மீள்விக்கப்பட்டது