பக்கம்:தமிழக வரலாறு.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

VII. சங்க காலத் தமிழகம்


சங்க காலம் :

சங்க காலம் தமிழ் நாட்டின் சிறந்த காலம் என்பர் வரலாற்றாளர். அந்தக் காலத்தை வரையறுப்பதில் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. மேலும், இன்று காணும் இலக்கியங்களும் சங்கம் மருவிய இலக்கியங்களும் ஒரே காலத்தில் எழுதப்பட்டன அல்ல. எனவே, சங்க காலம் மிகப் பரவிய காலம் என்பது உண்மையில் கொள்ளத்தக்கதாகும். அச்சங்க கால இலக்கியங்களே நம் பழைய வரலாற்றுக்குத் துணையாக அமைகின்றனவேயன்றி வேறு நிலையான சான்று ஒன்றும் இல்லை. இரண்டொரு மேலை நாட்டு வணிகர்கள் விட்டுச் சென்ற சொற்களும் குறிப்புக்களும் ஓரளவு உதவுகின்றன. பரந்து கிடந்த பண்டைத் தமிழ் நாட்டுக்கும் பின்னைய இந்தியாவுக்கும் இடையிலே சங்க காலத் தமிழகமே இணைக்கும் பாலமாய் அமைந்தது எனலாம்.

மூன்று சங்கங்கள் :

சங்கம் என்னும் போது மூன்று சங்கங்களும் நினைவுக்கு வரலாம். தமிழ் நாட்டில் மொழியும் கலையும் வளர்ந்த சங்கங்கள் மூன்று என்பர். முதல், இடை, கடை என்ற மூன்று சங்கங்கள் தென் மதுரையிலும், கபாடபுரத்திலும் மதுரையிலும் இருந்தன வென்பது இறையனார் களவியல் உரையில் தெரிகின்றது; அது அச்சங்கங்களைப் பற்றியும், அவற்றில் இருந்து தமிழ் ஆராய்ந்தாரைப் பற்றியும், அவை வாழ்ந்த கால எல்லையைப் பற்றியும் பலவாறு கூறுகின்றது அத்துணை எல்லையையும் அதன் பிற கூறுகளையும் அப்படியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/117&oldid=1357966" இலிருந்து மீள்விக்கப்பட்டது