பக்கம்:தமிழக வரலாறு.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

தமிழக வரலாறு


வன் என்றும் அவன் காலத்தில் இலங்கையில் ‘கயவாகு’ வாழ்ந்தான் என்றும் கண்டு, அக்கயவாகு இலங்கையில் வாழ்ந்த காலத்தை ஒட்டியே செங்குட்டுவன் காலத்தையும் அதற்கு முற்பட்ட சங்க காலத்தையும் வரையறை செய்வர். கயவாகு கி.பி. 113 முதல் 125 வரை வாழ்ந்தான் என்பர் கனகசபைப் பிள்ளை[1] அவர்கள். மேலும் அக்கயவாகு கி.பி. 173 முதல் 195 வரையில் வாழ்ந்தான் என்பர் நீலகண்ட சாஸ்திரியார் அவர்கள்[2]. எனவே, கடைச்சங்க காலம் அதற்கு முற்பட்டதாக வேண்டும். சாஸ்திரியார் அவர்கள் கி.பி. 100 முதல் 250 வரை கடைச்சங்க காலமாகக் கொள்ளலாம் 2 என்பர். செங்குட்டுவன் காலத்திலே கடைச்சங்கம் இல்லை என்று கொள்ளுவதுதான் பொருத்தமாகும். செங்குட்டுவன் காலத்தில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் தோன்றின. அந்த இலக்கியங்களுக்கும் சங்க இலக்கியங்களுக்கும் வேறுபாடு உண்டு. மேலும், கோவலனும் கண்ணகியும் மதுரைக்குச் சென்ற காலத்தில் சங்கம் இருந்ததாகக் குறிப்பில்லை. மதுரையைப் பற்றி விளக்கமாகப் பேசும் சிலப்பதிகாரம், சங்கம் இருந்ததைப் பற்றி ஒன்றும் குறிக்கவில்லை. சாத்தனார் சங்கப் புலவரேயாயினும் கோவலன் மதுரை புகு முன்பே சங்கம் கலைக்கப் பெற்று அவர் தனிமையில் வாழ்ந்திருக்க வேண்டும் எனக் கொள்ளலாம். கண்ணகியால் மதுரை அழிவுற்ற காலத்துக் கடைச்சங்கம் இருந்ததாகவோ, அதன் புலவர்கள் அரச சபையில் வீற்றிருந்தாகவோ ஒரு தகவலும் இல்லை. செங்குட்டுவன் காலத்தில் பாண்டியன் வெற்றிவேற் செழியன் மதுரையிலன்றிக் கொற்கையில்


  1. The Tamils 1800 years ago, p. 45.
  2. History of South India, p. 112
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/124&oldid=1358017" இலிருந்து மீள்விக்கப்பட்டது