பக்கம்:தமிழக வரலாறு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

தமிழக வரலாறு


முதலிய செய்யும் கொடுமைகளை விளக்குவதாயும், ஒன்றும் அறியாப் பச்சிளங் குழந்தைகளையும் பழி வாங்கும் வன்கண்மையைக் காட்டுவதாயும் இருப்பின், அந்த வரலாற்று முறை தமிழ் நாட்டிற்கு ஒவ்வாது[1] என்று P. T. சீனிவாச ஐயங்கார் திட்டவட்டமாகத் தமது முன்னுரையில் கூறியே தமது ‘தமிழர் வரலாறு’ (History of Tamils) என்ற ஆங்கில நூலைத் தொடங்குகின்றார். மேலும், அவர், வரலாறு என்பது ஆரவார மற்ற நிலைத்த வளர்ச்சியுற்ற மக்கள் சமுதாயத்தின் சமூக சமய வளர்ச்சியைப் பற்றியும், தாம் வாழும் நில அமைப்புக்கும் தட்பவெட்ப நிலைக்கும் ஏற்ப மக்கள் அமைத்துக் கொள்ளும் வாழ்க்கைமுறை பற்றியும், வளர்ச்சியுற்ற பல்வேறு கலாசாரமும் பண்பாடும் கொண்ட மக்களினத்தவர் ஒருவரோடு ஒருவர் கலந்து பழகும் முறைகள் பற்றியும், அன்றாட வாழ்வில் அவர்கள் மேற்கொள்ளும் உடை உணவு உறையுள் பற்றியும், அவற்றை ஆக்கி அளிக்கும் முறைகள் பற்றியும், அவற்றை மற்றவர்ளோடு பகிர்ந்து கொள்ளும் பண்பாட்டைப் பற்றியும், ஓய்வு வேளையில் அவர்கள் மகிழ்வோடு விளையாடிய விளையாட்டுக்கள் வேடிக்கைகள் பற்றியும், அவர்கள் தத்தம் கடவுளரையும் அரசரையும் போற்றிய விதங்கள் பற்றியும், அவர் தம் உள் நாட்டு வெளிநாட்டு வாணிப வளன் பற்றியும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் பற்றியும், அவர் தம் கல்வி வளர்ச்சி பற்றியும் கூறுவதேயாகும் எனக் கொள்ளின், தமிழ்நாடு அத்துறையில் பலப்பல உண்மைகளைக் காட்ட வல்லது என்பதை எடுத்து விளக்குகின்றார். இக்கருத்தை ஒட்டியே பேராசிரியர் நீலகண்ட


  1. History of Tamils, page iii
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/22&oldid=1356977" இலிருந்து மீள்விக்கப்பட்டது