பக்கம்:தமிழக வரலாறு.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240

தமிழக வரலாறு


மகிபாலனது உத்திரலாடமும் சோழரால் கைகொள்ளப் பெற்றன. இவ்வாறு கீழ்க்கரை வழியாகவே சென்று வங்காள எல்லையைக் கடந்து, இராசேந்திரன் சேனை கங்கைக் கரையை அடைந்தது. எனவே, இக்கால ஆந்திரம், ஒரிசா, வங்காளம், பீகார், மாகாணங்களுள் பெரும்பகுதியை இராசேந்திரன் வெற்றி கொண்டே கங்கைக் கரை சேர்ந்தான் என்பது பொருந்தும். இவ்வாறு பல அரசர்களை வென்று கங்கையையும் கடந்து சென்றான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடு குறிப்பிடுகின்றது[1]

கங்கை மொண்ட சோழபுரம்:

இவ்வாறு கங்கை வரை வெற்றி பெற்ற சோழர் படைகள் அங்கங்கே தம் ஆணையை நிலைநிறுத்தியதோடு, தம் பண்பாடு நாகரிகம் முதலியவற்றையும் தங்க வைத்தன போலும்! அக்காலத் தொடர்பால் உண்டான பல இயல்புகள் இன்றும் வங்காள மக்கள் வாழ்வில் இடம் பெற்றுள்ளன என்பர் வரலாற்றாளர்கள். இவ்வாறு கங்கை கொண்ட சோழபுரத்தை நிறுவி, அதிலிருந்து வீராபிடேகமும் விஜயாபிடேகமும் செய்து கொண்டு இராசேந்திரன் ஆட்சி செலுத்தினான். அங்குக் கங்கை கொண்ட சோழேச்சுரம் என்ற கோயிலையும் அமைத்தான். அதற்குக் கருவூர்த் தேவர் திருவிசைப்பாவும் உண்டு. அக்கோயில் சற்று அளவில்


  1. கங்கைப் பேராற்றில் யானைகளை வரிசையாக நிறுத்திப் பாலங்கள் அமைத்து, அவற்றின்மீது தன் படைகளைச் செலுத்தி, அ வாற்றை எளிதாகக் கடந்து சென்றான் என்று திருவாலங்காட்டுச் செப்பேடு குறிப்பிடுகின்றது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/242&oldid=1358840" இலிருந்து மீள்விக்கப்பட்டது