பக்கம்:தமிழக வரலாறு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எது வரலாறு?

23


கிடைக்காமல் போயின. இக்காலத்தில் சிலர் குறிப்பெழுதும் பழக்கத்தினை மேற் கொள்ளுகின்றனர். ஆனந்தரங்கம் பிள்ளை அவர்களின் அன்றாடக் குறிப்பு நூல் அவர் காலத்து வரலாற்றை நமக்கு நன்கு எடுத்துக் காட்டுகின்றது அன்றோ! ஆயினும், சிலர் தாம் செய்யும் சிறு சிறு செயல்களை எல்லாம் பெரியனவாக்கிக் காட்டிப் பெருமையும் கொள்கின்றனர். ஆகவே, இக்காலத்தில் ஓரளவு உண்மை புலனாவதோடு, வரலாற்றுக்குத் தேவையற்ற வெற்றுரைகளுங்கூடப் பெருக இடமுண்டாகின்றது. இப்படி ஒன்றும் எழுதி வைக்காத ஒரு நிலையும், இல்லதைப் புனைந்துரைக்கும் ஒரு நிலையும் வரலாற்று ஆசிரியர்களைத் திண்டாடத்தான் வைக்கின்றன. எனினும், உண்மை காணும் வரலாற்று ஆசிரியர்கள் ஆராய்ச்சி செய்து, அறிவோடு பொருந்தியவற்றைக் கண்டு, மக்களால் விரும்பப்படும் ஒரு சிறந்த வரலாற்று நூலையே எழுத முற்பட வேண்டும். வரலாறு இன்றேல், சென்ற காலத்தைக் காண முடியாது. அதன் வழி வருங்காலத்தையும் அமைக்க வழி வகை தெரியாது. எனவே, மக்கள் சமுதாயம் ஒழுங்குபட்ட ஒரு வரையறையில் செல்ல வேண்டுமாயின், அதற்குச் செம்மையான வரலாறே துணையாக நிற்கும் என்பது உறுதி.

வரலாற்று ஆசிரியர் நிலை :

வரலாறு கற்பது நல்லது தான். ஆனால் வரலாற்று ஆசிரியர் கற்போர் விரும்பி ஏற்கும் வகையில் தம் நூலை ஆக்க வேண்டும். சிறந்த வரலாற்று ஆசிரியர் எழுதும் நூல்கள் கதைகளே போன்று படிக்கப் படிக்க இனிமையாக, வெறுப்புத் தட்டா வகையில் அமைகின்றன. வரலாறு, தொடர்ந்த கதையாய் இராது என்பது உண்மை-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/25&oldid=1356995" இலிருந்து மீள்விக்கப்பட்டது