பக்கம்:தமிழக வரலாறு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

V. வரலாற்றுக்கு முற்பட்ட தமிழகம்

பரந்த பரப்பு:

வரலாறு என்றும் வாழ்வது. ஒரு நாடு வீழ்ச்சி அடைந்தாலும், அன்றி நிலை குலைந்தாலும், அன்றி அழிந்து விட்டாலும். அந்த நாட்டு வரலாறு மட்டும் எஞ்ச நின்று வாழும், உலகில் எத்தனையோ நிலப்பகுதிகள் இருந்து மறைந்தன. அவை வரலாற்று எல்லையில் நின்று மறைந்து சென்றிருப்பினும், அவற்றின் வரலாறு வாழ்ந்து கொண்டு தானே இருக்கும்! வரலாற்று எல்லைக்கு அப்பாற்பட்டதாயினும், அவை இருந்து அழிந்த நிலை எப்படியும் உலவிக் கொண்டிருக்கிற தன்றோ! அத்தகைய ஒரு நிலை நம் தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகம் இதற்கு விலக்காகுமா? தமிழ்நாடு எல்லையால் இன்றைய எல்லையைக் காட்டிலும் மிகவும் விரிந்து பரவியதாய் இருந்தது என்பதை நிலவரலாற்று ஆசிரியர்களும் உயிர் வரலாற்று ஆசிரியர்களும் ஒருசேர ஆராய்ந்து முடிவு கண்டுள்ளனர். அந்த நாட்டுப் பரப்பு மிக விரிந்து கிடந்தது என்பர். இறையனார் களவியல் உரை போன்றவை காண்பாருக்கு அந்தப் பரந்த பெரு நாட்டின் பிரிவுகளும், அவற்றின் பெயர்களும் பிறவும் நன்கு விளங்கும். சங்கங்கள் மூன்று இருந்தன எனவும், முதற் சங்கம் தென்மதுரையிலும், இடைச் சங்கம் கபாடபுரத்திலும் கடைசங்கம் இக்கால மதுரையிலும் இருந்தன எனவும் கூறுகின்றனர். முதற்சங்கம் இருந்த மதுரையும், இடைச்சங்கம் இருந்த கபாடபுரமும், அவற்றைச் சார்ந்த பஃறுளியாறு, குமரிமலை அனைத்தும் கடல் கோள்களால் அழிந்து விட்டன என்பர். பஃறுளி என்பது வெற்று வெள்ளப் பெருக்கைக் குறிப்பதென்றும், 'குமரிக்கோடு'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/73&oldid=1375634" இலிருந்து மீள்விக்கப்பட்டது