பக்கம்:தமிழக வரலாறு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

தமிழக வரலாறு


தான்; உழவுக்கும் பிற வாழ்க்கைக்கும் வேண்டிய பல பொருள்களைக் கண்டான். அவனுக்கு அன்று விஞ்ஞானம் தெரியாத ஒன்று. எனினும், இன்று விஞ்ஞானச் சாதனை வழிக் காணும் பல பொருள்களைக் கண்டு, அவற்றின் உதவியால் அன்றைய கற்கால மனிதனும் தன் வாழ்க்கைக்கு வேண்டிய பல தேவைகளைச் செய்து முடித்தான் எனலாம்.

உழவுக்கு வேண்டுவது மழை. மழை இன்ன காலத்தில் பெய்யும், இன்ன காலத்தில் பெய்யாது என்ற நிலையை ஓரளவு உணர்ந்துகொள்ள முடிந்தால்தான் பருவத்தே பயிர் செய்ய முடியும். ‘பருவத்தே பயிர் செய்,’ என்றது நமக்குப் பழமொழியானாலும் அன்றைய மனிதனுக்கு அது புதுமொழியுமல்லாத ஒரு புரியாத மொழி. எனினும், பயிர்த்தொழில் பழக்கம் ஏற்பட்ட பின் அந்தக் கால எல்லைக்கு ஆதிமனிதனும் கட்டுப்பட்டே வாழ்நதிருப்பான். மழை பெய்தால் மண் கிளறி விதைத்து, வெள்ளத்தாலும் வெயிலாலும் சேதம் உண்டாகாதபடி பாதுகாத்து, அறுவடை செய்திருப்பான் அவன். எனவே, அவனுக்குப் பருவங்களும் அவற்றில் விளையும் பொருள்களும் பிறவும் தெரிந்திருக்க வேண்டும். சூரியனை முதலாகக் கொண்டு கணக்கிடும் பல கணக்குகளின் (Solar System) பாகுபாடுகளை அவன் நன்கு அறியானேனும், அவற்றின் அடிப்படைகளைப் புரிந்தேதான் அன்று அவன் உழவுத் தொழில் செய்து வந்தான். அந்தக் காலத்தை வரலாற்று ஆசிரியர்கள் கி. மு. 6000க்கும் 3000க்கும் இடைப்பட்ட காலம் என்பர். அக்காலத்திலேதான் மனிதன் காற்றின் விசையையும், சூரிய கதியையும், இரண்டும் சேர்ந்து கொண்டு வரும் மழையையும், அவற்றின் உதவியால் பயிர்த்தொழில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/84&oldid=1357454" இலிருந்து மீள்விக்கப்பட்டது