பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழங்கும் நாளோலக்கச் சிறப்புடையான். பா ண ர் முதலாம் இரவலர்க்கு, அவர் வேண்டும் பொருள்களோடு, களிறுகளையும் வழங்குவன். அ த ன ல் அவ்வூனூரில் எங்கு காணினும், அவன் கொடுத்த களிறுக் கூட்டத்தைக் 5爪5ö了6)町主D, வாட்போர் வன்மையாலும், வரையாது வ ழ ங் கு ம் வள்ளன்மையாலும், வாய்மையுடைமையாலும், அவ ன் புகழ், தமிழ்நாடு முழுவதும் சென்று பரந்தது. அவன் அத்தகு பெரும் புகழ் உடையனா தலை அறிந்த புலவர்கள் பல்லோர் , அவனைப் பாராட்டியுள்ளனர். அவ்வாறு பாராட்டிய புலவர்களுள் தூங்கலோரியார் என்ற பழம் பெரும் புலவரும் ஒருவர், ஆவர் எனப் புகழ்ந்துள்ளார். பெரும் புலவர் நக்கீரர். இவ்வளவே! இம் மூன்று பாடல்களைமட்டுமே அகச்சான்றுகளாகக் கொண்டு. திருவாளர். ரா. இராகவையங்கார் அவர்கள், தழும்பன், கோசர் குலத்தவன் என முடிவு செய்துள்ளார் அண்ணாமலைப் பல்கலைக் கழகம், 1951ல் வெளியிட்ட 'கோசர் எனத் தலைப்பிட்ட, அவருடைய ஒரு சிற்றா ராய்ச்சி நூ லி ல், "இவன், பாண்டி நாட்டு மருர்கூர்ப் பட்டினத்தையடுத்த ஊனுரிலிருந்த கோசர் பெருவீரன்' என்றும் 'கோசர் பாண்டியர் க்கு உறுதுணையாதல் மதுரைக்காஞ்சியடிகளைக் கா ட் டி முன்னரே விளக்கி னேன்' என்றும், “இவன் வாய்மொழியிற் சிறந்த கோசர் குடியினனாதல் அறியலாம் என்றும், “இக் கோசகுலம் எதிர்த்த படையில் யானையையல்லது எறியோம் என்று திவ்ய சபதஞ் செய்து ஹஸ்திகோசம் என்னும் ஒரு குழுவா கவும்...வழங்கப்படும்' என்றும் கூறியுள்ளார். தழும்பன். கோசர் குலத்தவன் என்பதற்கு திருவாளர் * இராகவையங்கார் கூறும் காரணங்களை நிரலே ஆராய் 90