பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருங்கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து எல்லுமிழ் ஆவணம்’ - அகம் 227. இப் பாடல் மூன்றாலும் நாம் அறியக் கூடியதெல்லாம், 'வாணிய வளத்தால் சிறந்தது கடற்கரை நகராகிய மருங் கூர்ப்பட்டினம். அவ்வூரை அடுத்து ஊனுணர் என்றோர் ஊர் இருந்தது. அது நீர்வளமும், நில வளமும் நிறையக் கொண்டது. வயலில் விளைந்து முற்றிய வெண்னெல் அரிபவர் அரியப் புகுமுன், அவ் வயலில் கூடுகட்டி வாழும் புள்ளினங்களை,ஊறு செய்யாது ஒட்டக் கருதித் தண்ணுமை முழக்குவர்; அவ் வயலருகே, வானுற ஓங்கி வளர்ந் திருக்கும் தென்னை முதலாம் மரங்களில் கூடிகட்டி, வாழும் தேனிக்கள், அத்தண்ணுமை ஒலி கேட்டு அஞ்சித் தம் கூடுவிட்டுப் பறந்தோடிவிடும். தேனிக்கள் இல்லாத .ே த ன் கூ டு பற்றுவதற்கு எளிதாதல் அறிந்த அவ்வூர் வாழ்குயவர் அத்தேன் கூட ழித்துத் தேன் கொள்வர். அவ்வூர்ப் பாண்சேரி வாழ் பாணர், சிறுவலை கொண்டு, சிறுமீன் பிடித்து உண்டு மகிழ்வர். அவ்வூரைச் சூழ, நெடிய பெரிய மதில் அமைந்திருந்தமையால், ஊனுணர் அரிய காவலையும் கொண்டிருந்தது. அவ்வூனுர்க் கண், கொடையும், கொற்றமும் குறை வறப்பெற்ற குருசில் ஒருவன் வாழ்ந்திருந்தான் வாட் போர் வல்லனாய அவன், தான் மேற்கொண்ட போர் ஒன்றில் பெண் யானையால் மிதியுண்டு பெரும் புகழ் பெற் றான். அப்புண் தந்த தழும்பு, பெரிய வழுதுணங்காய் அளவு பெரிதாதல் கண்ட மக்கள், அவனை வழு துணைத் தழும்பன் என்றும், அடைகொடாது, தழும்பன் என்றும் பெயரிட்டுப் பாராட்டினர். வாட்போல் வல்லனாய அவன், என்றும் வாய்மையே வழங்கும் வழக்கம் உடையவன் தன் னைப் பாடிவரும் பாணர் முதலாம் இரவலர்க்கு வரையாது 89