பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாம் முதல் காரணம் : தழும்பன், பாண்டி நாட்டு மருங் கூர்ப் பட்டினத்தை அடுத்த ஊனுாரில் இருந்தவன் ஆகவே கோசர் மரவினன் என்பது, அவர் கூற்றை ஏறறுக் கொள்வதாயின் பாண்டி நாட்டு ஊர்களில் வாழ்பவர் அனைவரும் கோசர் ஆதல் வேண்டும். இது வாத நெறியாகாது, இரண்டாவது காரணம், கோசர் பாண்டியர்க்கு உறு துணையாதல் மதுரைக் காஞ்சி அடிகளைக் காட்டி முன் னரே விளக்கியுள்ளேன் என்பது. கோசர் பாண்டியர்க்கு படைத்துணை அளித்தனர் என்பது உண்மை; மோகூர் மன்னன் பழையன் மாறன் தலைமையில் கோசர் படை யொன்று பாண்டி நாட்டில் ஒரு காலத்தில் இருந்தது என் பது உண்மை, பாண்டியர்க்குப் படைத் துணை அளிப்ப வர் எல்லாம் கோசர் ஆகிவிட முடியாது. பாண்டி நாட்டில் அருப்புக் கோட்டையை அடுத்து நாலை என்றோர் ஊர் இருந்தது. இப்போது அது நாலூர் என வழங்குகிறது. அவ்வூரில் நாகன் என்பான் ஒருவன் உரிமை பூண்டு வாழ்ந்திருந்தான். அவன் பாண்டியர்க்குப் படைத்துணை வேண்டியிருக்கும்போது வாட்படை வழங்கு வன். நல்லரசு நடத்த வேண்டியபோது அதற்கு வேண் டும் அரசியல் அறநெறி அறிவுரைகளை வழங்குவன்." ஆகவே, அவனைக் கோசர் குலத்தவன் எனக் கூறிவிடு வதா? அவன் கோசர் மரபினன் அல்லன் நாகர் மரபினன் என்பதை நாகன் என்ற அவன் பெயரே உறுதி செய்கிறது. ஆகவே பாண்டியர்க்குப் படைத்துணை அளித்தனர், ஆகவே கோசர் என்பதும் பொருந்தாது. - கோசர், பாண்டியர் படையில் பணி புரிந்திருக்கலாம். அதற்கும் தழும்பனுக்கும் என்ன தொடர்பு? இல்லாத தொடர்பை உண்டாக்க திருவாளர் இராகவையங்கார் 91