பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அவையகம் விளங்கும் வண்ணம், இக் கோசர் சமயத்து வந்து தோன்ற வேண்டியது இல்லை என்க. இத்தொடர்பு, அவ்வரசற்கும், இக்கோசர்க்கும் உள்ள குடிப்பிறப் பொற்றுமையே ஆம் எனின் நன்கு பொருந்தும் உற்றுழி உதவுவேம் என்று, தம் இனத்தவரான மோகூர் மன்னன் புழையனுக்கு உரைத்த வண்ணம், அவன் அவையகம் விளங்க வந்து தோன்றி உதவியதனையே, இது குறிப்புதென்பது நன்கு உணரலாம் இவ்வுதவி, மோரியர், தென் திசையில் வடுகரை முன்னுற விட்டுப்படையெடுத்து வந்த போது, மோகூர் அவர்குப் பணியாமல் எதிர்த்து நின்ற நிலையில், அம் மோகூர்க்குத் துணையாக, அவர் ஆம்பலத்துச் சமயத்துத் தோன்றியப் பகைப் படையை சிதைத்ததனையே குறிப்பதென்று என்றும்; -16 ஆம் பக்கத்தில் “மோரியர் வடுகரை முன்னிட்டுக் கொண்டு தென் திசையில் உள்ள நிலம் உள்ளவரையும் வென்று கொள்ள எண்ணிப் படையெடுத்து வந்தபோது, வந்த போது, மோகூர் அவர்க்குப் பணியாது எதிர்த்து நிற்க, அம் மோகூர் தளராதபடி கோசர், தாம், முன் உற்றுழி உதவுவதாகச் சொல்லிய வண்ணம், அம்மோகூர் ஆலம் பயத்துத் தோன்றிப் பாசறை கொண்டு பகைப்படையைச் சிதைத்தனர், மோகூர் பணியாமல் இருந்தது இயல்பாகிய வீரத்தானும், தம் இனந்தவராகிய கோசர், சமயத்து வந்து உதவுவார் என்ற துணிபாலும் ஆம்” என்றும், “மோகூர்க்கும் கோசர்க்கும் பொதுவான பகைப்படை மோரியர் படையாம்” என்றும் கூறியுள்ளார்.

3 திரு. கே. ஏ. நீலகண்ட சாஸ்திரியார் கூற்று :

டெல்லி, வாரணாசி, பாட்னா, நகரங்களைத்தலைமை இடங்களாகக் கொண்ட, “மோதிலால் பானர்ஸி தாஸ்” என்ற நிறுவனம் வெளியீடாக, 1951 ல், திருவாளர் கே. ஏ. நீலகண்ட சாஸ்திரியார் அவர்களின், “நந்தர்

2