பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கோசகர்ளும், அவர்கள் தலைவனாகிய ப ைழ ய ன் மாறனும், யாராலும் வெற்றிகொள்ள மாட்டாப் பேராண் மை உடையவராக விளங்குவது கண்ட வடநாட்டு அரசர் கள் முதற்கண் மோகூர்ப் பழையனை வெற்றி கொண்டால் அல்லது, தமிழகத்துள் நுழைய முடியாது என்பதை உணர்ந்திருந்தனர். அதனால், அவ்வடநாட்டரசர்கள் திரண்டுவந்து மோகூரைத் தாக்கினர். அத்தாக்குதல் நிகழ்ந்த அக்கணமே, மோகூர் அரண் நடுவகத்தே நிற்கும் ஆலமரத்தடியில் பாடிகொண்டிருந்த கோச படை, தேர்படையோடு, அரண் புறத்தே சேர்ந்து வடபுலத்து அரசரை முறியடித்து துரத்திவிட்டு மோகூர்க் கோட்டையைக் காத்தினர். மோகூர்க் கோட்டை பணியாது போகவே, வந்த வட நாட்டரசர், மோகூன்ரப் பணியவைக்க வேண்டுமாயின் வடபேரரசாம், மோரியரின் தேர்ப்படை தென்னாடுநோக்கி வந்தாக வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர், மோரி யர்க்கு அழைப்பு சென்றது. மோரியர் தேர்படை தென் னாடு நோக்கிப் புறப்பட்டது. புறப்பட்ட மோரியர், தமிழ கத்துள் தாம் மட்டும் நுழைவது கூடாது: அது, இயலவும் இயலாது. தமிழ் நாட்டின் வட எல்லைக் கண் உள்ள, பலம் மிக்க வடுகர் துண்ையும் தேவை என்பதை உண்ர்ந் தனர். வடுகரும் அதற்கு இசைந்தனர். வடுகர் தூசிப்படையாக, முன்னே அணி வகுத்துச் செல்ல, பின் தொடர்ந்து வந்த மோரியரின் தேர்ப்படை கள் தமிழகத்தின் வடவெல்லைக்க்ண் நிற்கும் மலைத் தொடரால் தடுத்து நிறுத்தப்பட்டன. உடனே, அத்தேர் கள், எளிதே உருண்டோடுவதற்கு ஏற்ப, அம்மலை யிடையே பாறைகள் உடைக்கப்பட்டு வழி அமைக்கப் பட்டது. - - 13