பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடம் பெற்றிருப்யது போலும் சொல் எதுவும், இவ்விரு பாடல்களில் இடம் பெறவில்லை. . . . . கி.மு. முதலாம் நூற்றாண்டில், தமிழ் நாடாண்ட சோழப் பேரரசன் கரிகாலன், தமிழ்நாடு முழுவதையும் தன் ஆனைக் கீழ் கொண்டு வந்தும், மனநிறைவு கொள்ளா னாய், மேலும் போரே. விரும்பிய நிலையில், தன்னை எதிர்ப்போர், தமிழகத்தில் யாரும் இன்மை அறிந்து, நல்ல நாளில். வாள், குடை முரசு முதலாயவற்றை முன்னே போக விட்டு, என் வலி கெழு தோளின் பெருமையை இம் மண்ணக மருங்கில், என் நண்ணார்' பெறுக என வஞ்சினம் கூறி வடநாடு சென்றான். சென்றானை, இமயம் இடை நின்று தடுத்து விட்டது, அதனால் சினங் கொண்ட, சோழர் குலக் குரிசில், அம் மலையின் முடியில் தன் குலச்சின்னமாம் புலி பொறித்து மீண்டான் என்கிறது சிலப்பதிகாரம்பி, “செரு வெங் காதலின் திருமாவளவன் வாளும், குடையும் மயிர்க்கண் முரசும் நாளொடு பெயர்த்து நண்ணார் பெறுக! இம் மண்ணக மருங்கின் என் வலிகெழு தோள்' எனப் புண்ணிய திசைமுகம் போகிய அந்நாள் அசைவில் ஊக்கத்து நசை பிறக்கு ஒழியப் பகை விலக்கியது; இப் பயங்கெழுமலை என இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலைக் கொடுவரி ஒற்றிக் கொள்கையிற் பெயர்வோன். -சிலம்பு : 5 , 90.98 கரிகாலன் இ ம யப் படையெடுப்பு உண்மையான வரலாற்று நிகழ்ச்சியே என்பதைக் கலைமகள் திங்கள் இதழில் திருவாளர். மு. இராகவ அய்யங்கார் அவர்கள் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரையும் உறுதி செய்கிறது. ஆங்கு அவர் கூறியிருப்பதாவது; - - 30