பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"இமயப் படையெடுப்பு, சோழன் தலைமையின் கீழ்த் தமிழரசரால் ஒரு காலத்து நிகழ்ந்தது என்ற வரலாற்றைப் புதியதாகத் தெரியவரும் அரிய செய்தி ஒன்றும் ஆதரித்து நிற்பதை இனிக் கூறுவேன். மேலே நான் கூறியவற்றை யெல்லாம் ஒரு சேரக்கொண்டு நோக்குமிடத்து. திருமா வளவன் சென்று வந்த இமயமலை இப்போது சிக்கிம், பூட்டான் என்ற இராஜ்யங்களுக்கு இடையில் உள்ள மலைப்பகுதியே யாதல் வேண்டும். என்னெனில் இப்பகுதி யில் தான், வங்காளத்து டார்ஜிலிங்கிலிருந்து திபெத்துக் குச் செல்லும் கணவாய்கள் உள்ளன. இக்கணவாய்களில் சில முற்காலத்தும், இக்காலத்தும் வியாபாரப் போக்கு வரத்துக்கு உரியனவாய் அமைந்தனவாகும். - இவைகளும், பல மாதங்கள் வரை. பனி மூடப்பெற்று அடைபட்டுக் கிடத்தலால், சில காலங்களே, அப்போக்கு வரத்துக்கு ஏற்பன வாகின்றன. வங்காள மாகாணத்தில் அடங்கி உள்ள வச்சிர, மகத நாடுகளுக்கு வெகு தூரமில் லாததாய், இமயத்தைக் கடந்து செல்வதற்கு ஏற்ல வழி யுடைய பிரதேசங்களுள், ஸி. க் கி ம், பூட்டான் க்ளுக்கு இடையில் உள்ள கணவாய்களே சிறந்தவை. ஸிக்கிம் ராஜ்யத்துக்குக் கிழக்கே, அதற்கும் திபெத்துக்கும் உள்ள எல்லையை வரையறுத்து நிற்கும் மலைத்தொடரானது செங்குத்தாய் ஆகாயத்தை அளாவிக்கொண்டு பெருங் கோட்டை மதில் போல் நீண்டு செல்கிறது. இம் மலைத் தொடரை அடுத்துச் செல்லும் கணவாய், சமுத்திர மட்டத்துக்கு மேல் 14500 அடி உயரமுடையதாய் திபெத் பிரதேசமாகியஒம்பிப் பள்ளத்தாக்கிற்குக் கொண்டு போய் விடக்கூடியது. இம் மலைக்கும், இதனை அடுத்த கணவாய்க்கும் வழங்கும் பெயர்கள் கவனிக்கத் தக்கன சோழ மலைத் தொடர் (Chola Range) சோழர் கணவாய் (chola pass) என்பன அவற்றிற்கு இன்றும் வழங்கிவரும் நாமங்களாகும்.19 - 3i