பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிக்கை ஊக்கமூட்டவே களம்புகுந்து எயினனை எதிர்த்துப் போரிட்டான், நிகழ்ந்த கடும் வாட் போரில், எயினன் வாட்புண் பெற்று இறந்து போனான், மிஞிலி வீரர்கள், தம் வாட்களை வானோக்கி உயர்த்தி வெற்றிக் கூத்தாடிக் களித்தனர். ஆஅய் எயினன் வீழ்ந்து விட்டான்; அவனுக்குத் துணை நின்ற வேளிர்குல வீரர் பலரும் வீழ்ந்து விட்டனர். அதைக் கண்ணுற்றன, எயினன் பேணி வளர்த்த பறவைக் கூட்டம். அவற்றால்; இறந்தாரை உயிர்ப்பிக்க இயலாது, எனினும், அவர் தம் உடல்களை வெயில் படாதவாறு காக்க வாவது வேண்டும் என்று கருதின. சிறகுகளை விரித்துப், பந்த லிட்டாற்போலப் பறந்து நிழல் தந்தன. - கணவன்மார்களைக் களத்தில் பறி கொடுத்த வேளிர் மகளிர் களம் புகுந்து தாம் சூடியிருந்த மலர் களைக் களைந்து கசக்கி எறிந்து கலங்கலாயினர். போரின் முடிவினையும், போர்க்கள நிகழ்ச்சிகளையும் அறிந்து கொண்டான் நன்னன் தன் பொறுட்டு உயிர் துறந்த எயினன் உடலை அடக்கம் செய்ய வேண்டுவதும் வேளிர் மகளிர் துயர் துடைக்க வேண்டுவதும் அவன் கடமை, ஆனால் அவன் போர்க்களம் சென்றானல்லன். பறவைக் கூட்டத்திற்கு இருந்த அருள் உள்ளம் கூட அவ னுக்கு இல்லை மிஞரிலிக்கு அஞ்சி, அரணுக்கு உள்ளேயே ஒளிந்து கொண்டான். - வேளிர்மகளிர் துயர் களைவார் யாரும் இல்லை. அந் நிலையில் வந்து உதவினான் பெரும்படை யுடையவனும், தன் நாளோலக்கத்தில் அமர்ந்து, பாணர் பொருநர் போலும் இரவலர்களுக்குப் பொன்னணிகளை வாரி வழங் கும் வள்ளல் பெருந்தகையுமான அகுதை என்பான். அவன் வேளிர் மகளிர்துயதுர் டைத்துத் துணை நின்றான், 61