பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதியில் செல்வன்; பொலத் தேர்த்திதியன்' என்ற வரி, திதியன் என்பான் ஒருவன் பொதியிலில் வாழ்ந்திருந் தான் எனக் கொள்ளத்தான் துணை புரியும். அவனை, ஒல்லையூர் தந்த பூதப் பாண்டியன் பாடினார் என்பதால் அவனைப் பாண்டியர் குத் துணையாவான் என ல் பொருந் தாது. அப்பொதியில் திதியனைப் பரணரும் பாடியுள்ளார்.1 திருவாளர் அய்யங்கார் அவர்கள் அப்பாட்டைச் கண்டு கொள்ளவே இல்லை. - - வேளிரொடு போரிட்ட திதியன் ஒருவனை மாமூலனார் அறிமுகப் படுத்தியுள்ளார். அது, இது; “நாளவை இருந்த நனைமகிழ்த் திதியன் வேளிரொடு பொரீஇய கழித்த வான் '12 இதில் வேளிரொடு போரிட்ட அத்திதியனின் வாள் வன் மைதான் கூறப்பட்டுள்ளது. இத் திதியனுக்கும் பொதியில் திதியனுக்கும் உள்ள உறவு, உறவின் மை எதுவும் கூறப் படவில்லை. அங்ங்னமாகவும் இவன் பொதியில் திதிய னின் வேறாவன் என்பது, 'வேளிரொடு பொரீஇய: 18 என்பதால் அறியலாம் என்பது பொருந்தாது, . . . தமிழகத்தில், வேளிர், கோசர் தவிர்த்து, வேறு பிற இனத்தவரும் இருந்தனர். ஆகவே. ஆகவே, வேளிர் அல்லன்; ஆகவே கோசன் என்ற வாதம், வாதநெறியொடு பட்டது ஆகாது ; பொதியில் திதியன் கோசன் அல்லன். - * - 3. தலையாலங்கானப் போர்த் திதியன் : பாண்டியன் நெடுஞ்செழியன் ப ா ல், தலையாலங் கானப் போரில் தோல்வி கண்டவர்கள், சேரன், சோழன் உள்ளிட்ட எழுவராவர் என்கிறார் நக்கீரர். 79