பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் 2

பாட்டியும் பேத்தியும்

அலைந்திடும் ; நீண்டு தொங்கும்
தலைப்பின்னல் அங்கும் இங்கும்!
கலகலப் போடு பெண்கள்
கையினால் குனிந்து தட்டி
மலைநாட்டுச் செங்கோல் வாழ்த்தித்
தனித்தமிழ் வாழ்த்து கின்றார் !
கலைமதி கும்மி கேட்டுக்
களிப்பொடு தவழும் வானில்!

9

நாணலின் பூவை யொத்த
நரைமயிர்ப் பாட்டி இல்முன்
கோணிய முதுகைத் திண்ணைக்
குறுஞ்சுவர் மீது சாய்த்துக்
காணுவாள் சிறுவர் கும்மி
ஆட்டத்தைக் ; களிப்பாள் ; ஓடிப்
போனதன் இளமை எண்ணிப்
பொக்கைவாய் அசைப்பாள் அந்தோ !

10
4