பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அவ்வேளை எங்கி ருந்தோ
தமிழச்சி அங்கு வந்தாள்;
கவ்வையில் நீந்து கின்ற
பாட்டியின் காற்பு றத்தே
செவ்வையாய் மண்டி யிட்டுக்
குந்தினாள்; சிரித்தாள்! பாட்டி
'இவ்வேளை ஏற்ற(து)' என்றே

எண்ணினாள்; சொல்ல லுற்றாள்:
11


"நம்இனப் பண்புக் கேற்ற
நடைஇல்லை உன்னி டத்தில்;
இம்மியும் வீட டங்கி
இல்லைநீ; வயதில் நாங்கள்
அம்மியைப் போலே வீட்டில்
இருந்தனம்; அன்னை தந்தைக்(கு)
இம்மியும் மீறிப் பேசோம்;

எதுவுரைத் தாலும் செய்வோம்;
12


"பாரடி அந்தப் பெண்ணைப்
பழக்கிய வகையை' என்றும்,
'ஆரிடம் வாழ்வாள் அன்னாள்
அவள்வாயால் அடடா' என்றும்
ஊரினில் உன்னைப் பற்றிப்
பேசாதார் ஒருவர் இல்லை ;
கார்கால மயிலே! என்சொல்

கடைப்பிடி; அடங்(கு)!"என் றாளே!
13


5