பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இயல் 4

சேரியில் சீர்திருத்தம்


சேரியின் முடக்கில் மூன்று
செங்கல்லை நட்டு வைத்த
மாரியின் கோயி லண்டை
தமிழச்சி வந்தாள்;"உங்கள்
ஊரினைச் சீர்தி ருத்த
நினைக்கின்றேன்; உங்கட் குள்ளே
ஆரேனும் இருவர் வாரீர்!
அறப்பணி செய்வோம்!"என்றாள். 32.

மானமே உயிராய் வாழும்
தமிழர்தம் வழியில் வந்தோன்,
'நான்' என ஒருவன் வந்தான்
கூட்டத்தின் நடுவி ருந்து ;
"வானிடி எதிர்த்திட் டாலும்,
மலைகடல் குறுக்கிட் டாலும்
நானென்றன் சேரிக் காக
நல்குவன் உயிரை!"என்றான்.

33

13