பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சிங்கத்தின் உயர்ந்த நோக்கான்;
திரண்டுருண் டிட்ட தோளான்;
மங்கையர் துயில எண்ணும்
விரிந்துமுன் எழுந்த மார்பன்;
கங்குலின் நிறத்தான்; 'சேரிக்
காளை'யென கின்ற பேரால்
அங்குளோர் அழைப்பர்; ஆனால்,
அவன்பெயர் மதுரை வீரன்! 34

ஒருசிலர், "வேண்டாம் அம்மா!
ஒவ்வாதிச் செய்கை!" என்பார்;
ஒருசிலர், "ஊரார் கேட்டால்
வந்திடும் மோசம்!" என்பார்;
"வரப்புகள் கீழ்மே லென்றிங்(கு)
ஈசனே வகுத்தி ருக்கச்
சரியிலை உங்கள் எண்ணம்;
சரியில்லை!" என்றார் சில்லோர்.35

ஒருகிழம், "பறையர்க் கேனோ
ஒழுக்கம்நன் னடைகள்?" என்னும்;
ஒருகிழம், "மாரி சீற்றத்
துட்பட்டுச் சாவோம் !" என்னும் ;
ஒருகிழம் , "கஞ்சி இல்லை !
உதவாது திருத்தம்!" என்னும் ;
ஒருகிழம், "சேரிக்(கு) ஏதோ
கெட்டநாள்!" என்று ரைக்கும்.36

14