பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொன்னனின் கருங்கல் தோளைத்
தமிழச்சி புரட்டிச் சொல்வாள்:
"என்னரும் தமிழ்நாட் டுள்ளோர்
பெண்களை இழிவாய் எண்ணும்
சின்னபுத் தியைநான் மாற்றத்
துணிந்தனன்; செய்தி கேளாய்!
உன்னாலே ஒருபெண் மூட
உலகெதிர்த் திடமுன் வந்தாள். 52

"சாவடி, அறக்கூழ்ச் சாலை
கட்டுவார் தமிழர்; நாட்டில்
மேவிய அடிமை, மூட
விளைவெலாம் நீக்க எண்ணார்;
வாவியின் மலரை மானும்
பெண்களின் அடிமை மாற்ற
ஆவன செய்யார்; இன்னோர்
அறப்பண்பை நான்கி னைத்தேன். 53

"பக்கத்து வீட்டுக் குள்ளப்
பாப்பாத்தி சிலநா ளாகத்
திக்கிலா(து) அழுத கண்ணும்,
சிந்திய மூக்கு மாக
மக்கிவாழ் கின்றாள்; பேதை!
வாழ்வைஅக் கிழவன் கையில்
சிக்கிடா வகைநீர் நாளை
செய்திட வேண்டும்!" என்றாள். 54

21