பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

“பழிவந்து - சேரும் பெண்ணே!
பலர்எனை நகைப்பார்; மற்றும்
இழிவாக, அந்தோ ! அந்த
இளங்கொடி யாளை ஊரார்
மொழிவார்கள்; கதைப்பார்; தீர
முன்பின்னே எண்ணி ஒன்றில்
இழிந்திட வேண்டும்; வீணே
இதில் தலை யிடாதே! என்றான். 55.

பொன்னனின் அணைப்பாம் பூட்டைத்
தமிழச்சி உடைத்தெ றிந்தாள்;
முன்வந்தாள்; எதிரில் நின்றாள்:
"மூவேந்தர் ஆண்ட நாட்டில்
உன்போன்ற கோழை யாலே
உலுத்தது பெண்ணி னந்தான்;
பின்னொரு முறையும் முன்போல்
பேசாதே! வெட்கம்; வெட்கம்! 56

நல்லதைச் செய்வ தற்கு
கடுக்கமேன்? வீணர் கூட்டம்
சொல்வதற் கஞ்சி வாழ்ந்தால்
துயர்போமோ? அடிமை போமோ?
நல்லற மாமோ காதல்
நடமாடா மன்றல்? பெண்கள்
அல்லலை நீக்க என்றும்
அஞ்சாதே! விரைக இன்னே! 57
 

22