பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இயல் 6

பெண் கேட்க வந்தார்கள்


தமிழச்சி வீட்டில் இன்று
தடபுடல்; பொரியல் நாற்றம்
கமழும்;பெண் கேட்க இன்று
வருபவர் கால லம்ப
அமியோரம் இருந்த அண்டா
நிரப்பினாள் அன்னை; குப்பை
உமியினைக் கூட்டி வாரி
உட்காரப் பாய்வி ரித்தாள்.60

சுருள்பாக்கு, வில்வ நல்லூர்
பச்சைவெற் றிலை,சுண் ணாம்பு,
மருநிறை தூள்கள் யாவும்
வைத்தனள்; தன்வீட் டிற்கு
வருகின்ற புதுச்சம் பந்தி
வழிபார்க்க, அடடா! அன்னை,
தெருவிற்கும் வாச லுக்கும்
கடந்ததைச் செப்பப் போமோ!61

24